கமல் ஹாஸன் ட்விட்டர் கருத்துகளுக்கு கோனார் உரை வேண்டும்! - தமிழிசை
சென்னை: கமல் ஹாஸன் ட்விட்டரில் பதிவிடும் கருத்துக்களுக்கு கோனார் தமிழ் உரை வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு கமல் ஹாஸன் ட்விட்டரில் அரசியல் கருத்துகளைத் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். மாலை வேளைகளில் 7 மணிக்குப் பிறகு ட்விட்டரில் கருத்துப் பதிவு செய்வது அவர் வழக்கம்.

தொடர்ந்து அரசுக்கு எதிராக அவர் போட்ட ட்வீட்டுகளுக்கு ஏக ரெஸ்பான்ஸ். கூடவே பிக்பாஸ் நிகழ்ச்சி வேறு அவரை பரபரப்பு வெளிச்சத்திலேயே வைத்தது. இந்த நேரத்தில்தான் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அவர் அறிவித்தார்.
எல்லாம் சரியாகவே இருந்தாலும், கமல் ஹாஸன் போடும் ட்விட்டுகளில் மலிந்திருக்கும் எழுத்துப் பிழை, புரியாத மொழி நடை இரண்டும் சாமான்ய மக்களை குழப்பியடிக்கின்றன. குறிப்பாக சமீப நாட்களில் இந்த குழப்படி ட்வீட்டுகள் அதிகரித்துவிட்டன. சில தினங்களுக்கு முன் அவர் போட்ட ஒரு ட்விட்டில் ஒரே ஒரு கமா தவறாகப் போட்டுவிட, அதற்கு அர்த்தமே மாறிப்போய் கமல் கட்சியை அறிவித்துவிட்டார் என ஊடகர்களைப் பரபரக்க வைத்தது.
இந்து தீவிரவாதம் அவர் எழுதியது, பின்னர் அதற்கு மழுப்பலாக ட்விட்டரில் பதிலலளித்து போன்றவற்றுக்கு பாஜக கடுமையாக எதிர்வினையாற்றியது.
இந்த நிலையிஸல் கமலின் ட்வீட்களைக் கிண்டலடித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். இதுகுறித்து அவர் பேசுகையில், "கமல் ஹாஸன் ட்விட்டர் கருத்துகள் குழப்பத்தின் உச்சம். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை நேரடியாகவே சொல்லிவிடலாம். அவரது ட்விட்டர் கருத்துகளைப் புரிந்து கொள்ள தனி கோனார் உரைதான் வேண்டும்," என்றார்.


Click it and Unblock the Notifications