ஒரேயொரு கோரிக்கை விடுத்து அஜித், விஜய் ரசிகர்களை ஒன்று சேர்த்த தமிழிசை
சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்த கோரிக்கையை பார்த்து அஜித், விஜய் ரசிகர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.
அஜித் ரசிகர்கள் சிலர் திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பாஜகவில் சேர்ந்தனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவந்தரராஜன் அஜித் ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்தார்.
தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய உதவ வேண்டும் என்றார் அவர். மேலும் பிரதமர் மோடியின் திட்டங்களை தமிழக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றார் அவர்.
பாஜக
தமிழிசை சவுந்தரராஜனின் கோரிக்கையை பார்த்த அஜித் ரசிகர்களோ, விஜய் ரசிகர் மன்றத்தில் சேர்ந்தாலும் சேர்வோமே தவிர பாஜகவுக்கு பிரச்சாரம் செய்ய மாட்டோம் என்கிறார்கள்.
தமிழகம்
என்ன தான் விஜய், அஜித் ரசிகர்களுக்கு இடையே மோதல் இருந்தாலும் தமிழகத்தில் தாமரையை மலர விட மாட்டோம் என்கிறார்கள்.
தல ரசிகாஸ்
பாஜகவுக்கு பிரச்சாரம் செய்யும் அந்த தப்பை மட்டும் பண்ணவே மாட்டோம் என்று அஜித் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
மலரவே மலராது
அஜித் ரசிகர்கள் யாரும் பிரச்சாரம் செய்ய மாட்டார்கள். தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என்று கறாராக கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











