Sangeetha: கொடுமைபடுத்தும் விஜய்.. சங்கீதாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.. தமிழிசை பளிச்!
சென்னை: நடிகர் விஜய் மனைவி சங்கீதா குறித்த பேச்சும் கவலையும் தான் பெரிய பேசு பொருளாக உள்ளது. நடிகர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார். எனவே விஜய் உடனான எனது திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று ஏற்கனவே விவாகரத்து மனு தெரிவித்திருந்தார். இப்படி இருக்கையில் எனக்கு சென்னையில் தங்குவதற்கு வேறு இடமே இல்லை. எனவே இந்த விவாகரத்து வழக்கு முடிந்து நான் வேறு வீட்டிற்குச் செல்லும் வரையில் நான் விஜய்யின் நீலாங்கரை வீட்டில் வசிக்க உத்தரவு பிறக்க வேண்டும் என்றும் விஜய்யின் மனைவி சங்கீதா புதிய மனுதாக்கல் ஒன்றைச் செய்துள்ளார்.

இப்படி இருக்கையில் விவாகரத்து வழக்கின் தீர்ப்பு வரும் வரை தான் தனது புகுந்த வீடான நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதி வேண்டும் எனவும், வழக்கு முடிந்து வேறு வீட்டிற்குச் செல்லும் வரை தன்னை நீலாங்கரை வீட்டில் தங்க விஜய் அனுமதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமறத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னையில் வீடு இல்லை: மேலும் அவரது புதிய மனுவில், " பிரிட்டன் குடியுரிமையுடன் நான் லண்டனில் வசித்து வருவதால், எனக்கு சென்னையில் மட்டுமல்லாமால் இந்தியாவிலேயே தனியாக வீடு எதுவும் இல்லை. விவாகரத்து கோரியுள்ளதால் தற்போது சென்னையில் வீடு இன்றி தவிக்கிறேன். மேலும் என்னை வீட்டிற்குள் அனுமதிக்க நடிகர் விஜய் மறுக்கிறார். அதேபோல் கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் சேரவேண்டிய நியாயமான ஜீவனாம்சத்தை வழங்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நல்ல மனைவி: நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டதற்கு அவரது வழக்கறிஞர்கள் மூலம் தன்னை மிரட்டுகிறார். திருமணத்திற்கு பிறகு கடந்த 26 ஆண்டுகளாக ஒரு மனைவியக அவருக்கு எல்லாம் செய்துள்ளேன். குழந்தைகளை பெற்று கொடுத்துள்ளேன். அந்த குழந்தைகளை நன்றாக வளர்த்து ஒரு நல்ல இல்லறத்தை கட்டி எழுப்பி உள்ளேன். ஒரு மனைவியாக அவருக்கு எல்லா பணிவிடைகளும் செய்துள்ளேன். நீலாங்கரை வீட்டில் எனக்கும் சரிபாதி உரிமம் உள்ளது. அப்படி இருக்கையில் நான் நீலாங்கரை வீட்டில் தான் வசிக்க வேண்டும். இந்த விவாகரத்து வழக்கு முடியும் வரை நான் நீலாங்கரை வீட்டில் வசிக்க விஜய் அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவரது புதிய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











