ரொம்ப நன்றிங்க.. காப்பான் படம் பார்த்து நெகிழ்ந்த விவசாயிகள்.. சூர்யாவை சந்தித்து வாழ்த்து!

Recommended Video

காப்பான் படம் பார்த்து நெகிழ்ந்த விவசாயிகள்.. சூர்யாவை சந்தித்து வாழ்த்து!-வீடியோ

சென்னை: காப்பான் படம் பார்த்து டெல்டா மாவட்ட விவசாயிகள் நடிகர் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் நடிகர் சூர்யா நடித்த காப்பான் படம் வெளியானது. தற்போது இந்த படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பை பெற்று வருகிறது.

முதலில் மோசமான விமர்சனங்களை பெற்ற காப்பான் படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிகர் மோகன்லால் நடித்து இருக்கிறார். அதேபோல் ஆர்யா, சமுத்திரக்கனி, சாயிஷா ஆகிய பிரபலங்களும் படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார்கள்

காப்பான் எப்படி

காப்பான் எப்படி

காப்பான் படத்தின் கதையில் சூர்யா முதலில் சில நிமிடங்கள் விவசாயி வேடத்தில் நடித்து இருப்பார். அதேபோல் படத்தில் விவசாயிகள் படும் கஷ்டம் குறித்து நிறைய விஷயங்கள் பேசப்பட்டு இருக்கும். நடிகர் சூர்யா விவசாயத்திற்கு ஆதரவாக நிறைய விஷயங்களை இதில் குறிப்பிட்டு இருப்பார்.

வரவேற்பு

வரவேற்பு

காப்பான் படத்தில் வரும் இந்த காட்சிகள் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் நிறைய நல்ல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது. விவசாயிகள் படும் இன்னல்கள் குறித்தும் பேசப்பட்டு இருக்கிறது, என்று நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர்.

காவிரி

காவிரி

இந்த நிலையில் தமிழ்நாடு காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தினர் நடிகர் சூர்யா மற்றும் படத்தின் இயக்குனர் கே.வி ஆனந்த் ஆகியோரை சந்தித்து பேசினார்கள். இந்த படத்தில் விவசாயியை குறித்தும் அவர்களின் கஷ்டம் குறித்தும் பேசியதற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

நன்றி சொன்னார்

இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி ஆர் பாண்டியன், உங்களை சந்தித்தது சந்தோசம். இந்த படத்தை பார்த்தது பெரிய மகிழ்ச்சி அளித்தது. விவசாயிகள் தற்கொலை குறித்து இதில் பேசி உள்ளீர்கள். சூர்யா எங்களின் நம்பிக்கை என்று தமிழ்நாடு காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தில் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X