நடிகர் சூர்யாவுக்கு முதல்வர் வாழ்த்து..என்ன காரணம் தெரியுமா?

சென்னை : ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக சேர நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Tamilnadu chief minister MK Stalin praise actor surya for his oscar member invitation

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் மெகா ஹிட்டான சூரரைப் போற்று திரைப்படமும், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட ஜெய்பீம் திரைப்படமும் ஆஸ்கார் விருது போட்டியில் பங்கெடுத்தன. இதைத்தொடர்ந்து அந்தப் படங்களின் நாயகனான சூர்யா ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.

Tamilnadu chief minister MK Stalin praise actor surya for his oscar member invitation

திரைத்துறையில் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அது ஆங்கில படங்களுக்கான விருதாக இருந்தாலும், உலக சினிமா துறையினர் ஆஸ்கர் விருதின் மீது பெரும் மரியாதையே எழுந்துள்ளது. அத்துடன் ஆஸ்கரில் வழங்கப்படும் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் விருதினை பெறவேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாகவே உள்ளது.

2022ம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஆஸ்கர் வெளியிட்டுள்ளது. அதன்படி, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் நிறுவனத்தில் சேர 397 புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொழில் ரீதியான தகுதி, அர்ப்பணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகுதிகளை கொண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு உறுப்பினர்களின் அழைப்பாளர்கள் பட்டியலில், ஆஸ்கர் விருது வென்ற 15 பேர் உட்பட ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் 71 பேர் உள்ளனர்.

Tamilnadu chief minister MK Stalin praise actor surya for his oscar member invitation

ஆஸ்கர் அகாடமி அமைப்பின் உறுப்பினராக சேர சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, அவரது ரசிகர்களை உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் சூர்யாவின் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல இந்தி நடிகை கஜோலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

Recommended Video

Surya | 'பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது'... முதல்வருக்கு நன்றி *Kollywood | Filmibeat Tamil

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் 'தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, ஆஸ்கர் அகடாமி விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்! வானமே எல்லை!'' என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X