கமல், தனுஷ், சிம்பு, விஷாலுக்கு போடப்பட்ட ஸ்கெட்ச்? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு!
சென்னை: சினிமா உருவாக்கத்தில் தயாரிப்பாளர்களின் பங்கு மிகப்பெரியது. ஒரு காலத்தில் தயாரிப்பாளர்களுக்கும் சினிமா தயாரிப்பில் மாபெரும் பங்கு இருந்து வந்தது. ஆனால் இன்றைக்கு நூற்றுக்கணக்கான கோடிகளில் நடிகர்கள் சம்பளம் வாங்கத் தொடங்கிய காலகட்டங்களில் தயாரிப்பாளர்களின் நிலை என்பது பணத்தை கொடுத்துவிட்டு வேடிக்கை பார்ப்பதைப் போலான நிலைமை உள்ளது. ஒரு சில பெரும் தயாரிப்பு நிறுவனங்களின் படங்களிலேயே நடிகர்களுக்கும் தயாரிப்பு நிறுவனத்தினருக்கும் பிரச்னை ஏற்பட்டு விடுகின்றது.
குறிப்பாக தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து நடிகர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டு, படப்பிடிப்பை திட்டமிட்ட காலகட்டத்தில் முடிக்க நடிகர்கள் உதவுவதில்லை என்பதாகத்தான் இருக்கின்றது. ஒருநாளுக்கான கால்ஷீட் கொடுத்துவிட்டு, அந்த நாளில் பாதியிலேயே சென்று விடுகின்றனர். இதனால் அன்றைய கால்ஷீட்டை கணக்கில் கொண்டு செலவிடப்பட்ட பணம் வீணாகப்போகின்றது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றது.

கமல்ஹாசன்: இதனால் சில நடிகர்கள் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதில் இளம் நடிகர்கள் தொடங்கி தமிழ் சினிமாவின் மூத்த நடிகராக உள்ள கமல்ஹாசன் வரை புகார் கொடுக்கப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் தனது சிறுவயது முதல் நடித்து தற்போது இந்திய சினிமாவின் அடையாளமாக சர்வதேச அளவில் ஜொலிப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

இந்திய சினிமாவிலேயே ஒரு கம்ப்ளீட் சினிமாகாரன் என கமல்ஹாசனை பலரும் புகழ்வதுண்டு. அதற்கு காரணம் கமல்ஹாசன் நடிப்பது மட்டும் இல்லாமல், படத்தை இயக்குவார், பாடல் பாடுவார், பாடல் எழுதுவார், கதை, திரைகதை எழுதுவார், நடனக் கலைஞராக பணியாற்றியுள்ளார். சினிமாவில் புதுபுது ஐடியாக்களைக் கொண்டு வருவார். இப்படி சினிமாவின் என்சைக்ளோபிடியாவாகவும் பல்கலைக் கழகமாகவும் இருக்கின்றார். அதனால்தான் கமல்ஹாசன் இந்திய சினிமாவின் அடையாளமாக சர்வதேச அளவில் ஜொலிக்கின்றார்.

தீர்மானம்: அதேபோல் நடிகர் தனுஷ், சிம்பு மற்றும் விஷால் மீதும் தயாரிப்பாளார் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த புகாரை மையப்படுத்தி கமல், தனுஷ், சிம்பு மற்றும் விஷால் ஆகியோருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழுவில் உலக நாயகன் கமல்ஹாசன், தனுஷ், சிம்பு மற்றும் விஷால் ஆகிய நடிகர்கள் திரைப்படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நால்வர் மீதும் தயாரிப்பாளர் சங்கத்தில் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் புகார் கொடுத்திருந்தனர். குறிப்பாக கமல்ஹாசன் மீது இயக்குநர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மற்றும் நடிகர் சிம்பு மீது ஐசரி கணேஷ் புகார் கொடுத்திருந்தார். அதேபோல் தனுஷ் மீது தேனாண்டால் முரளி புகார் அளித்திருந்தார்.

நடவடிக்கை: இதனால் புகார் அளிக்கப்பட்டிருந்த நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான தீர்மானம் இன்றைய அதாவது ஜூலை 6ஆம் தேதி நடைபெற்ற செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் நடிகர் விஷால் மீது முந்தைய நிர்வாகத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளை முன்வைத்து ஒத்துழைப்பு வழங்குவதில்லை என முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











