கிளைமாக்ஸ்ல கண் கலங்கிடுச்சு.. அமரன் பார்த்துவிட்டு கமலிடம் பாராட்டிய முதல்வர் & துணை முதல்வர்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அமரன் படம் நேற்றைய தினம் தீபாவளி ரிலீசாக வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். கமல்ஹாசன் தன்னுடைய RKFI நிறுவனத்திற்காக இந்த படத்தை தயாரித்துள்ளார்.

அமரன் படத்தின் ஸ்பெஷல் ஸ்கீரினிங்கை படக்குழுவினர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு போட்டுக் காட்டினர். படத்தைப் பார்த்துவிட்டு மிகச் சிறப்பாக உள்ளதாக நடிகர் கமல்ஹாசனுக்கு தொலைபேசி மூலம் முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் பாராட்டு தெரிவித்தனர்.

cm mk stalin udayanidhi stalin amaran

அமரன் படம்: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அமரன் படம் நேற்றைய தினம் தீபாவளி ரிலீசாக பான் இந்தியா படமாக ரிலீசாகி உள்ளது. இந்த படம் சர்வதேச அளவில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி படத்திற்கான அடித்தளத்தை போட்டுள்ளது. இந்த படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். அவரது மனைவியாக, ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார் சாய் பல்லவி. இவர்கள் இருவரின் காம்பினேஷன் மிகச் சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருவரின் கெமிஸ்ட்ரி இந்த படத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

cm mk stalin udayanidhi stalin amaran

சிவகார்த்திகேயன் & சாய் பல்லவி கூட்டணி: குறிப்பாக சிவகார்த்திகேயனை விட இந்த படத்தில் நடிப்பில் சாய் பல்லவி ஸ்கோர் செய்துள்ளார். இவர்களின் கூட்டணியில் இந்த படம் முதல் முறையாக உருவாகியுள்ள நிலையில் முதல் படமே சிறப்பாக அமைந்துள்ளது. படம் கண்டிப்பாக 100 கோடி கிளப்பில் இணையும் இன்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முன்னதாக இந்த படத்தை ராணுவ வீரர்களுக்கு டெல்லியில் படக்குழுவினர் திரையிட்டு காட்சிப்படுத்தினர். படத்தை பார்த்துவிட்டு அவர்கள் அனைவரும் மிகவும் உற்சாகமடைந்ததுடன் நீங்கள் இராணுவத்தில் சேர்ந்து விடுங்கள் என்று சிவகார்த்திகேயனிடம் கூறியதாக அவர் பேட்டி ஒன்றில் உற்சாகத்தை தெரிவித்து இருந்தார்.

cm mk stalin udayanidhi stalin amaran

அமரன் படத்தை பார்த்த முதல்வர் & துணை முதல்வர்: இந்நிலையில் இந்த படத்தை தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவருக்கும் படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக படக்குழுவினர் திரையிட்டு காட்சிப்படுத்தியுள்ளனர். படத்தை பார்த்துவிட்டு கமல்ஹாசனுடன் தொலைபேசியில் முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். படத்தின் கிளைமேக்ஸ் மிகவும் டச்சிங்காக இருந்ததாக கண்ணே கலங்கிவிட்டதாகவும் முக ஸ்டாலின் அவரிடம் பேசியதை பார்க்க முடிந்தது. மேலும் இந்த திரையிடலின்போது அவர்களுடன் படத்தின் நடிகர் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டவர்களும் இணைந்திருந்தனர்.

படக்குழுவினருக்கு பாராட்டு: இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்ரைப பெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய பாராட்டுகளை பகிர்ந்துள்ளனர். தன்னுடைய முந்தைய படத்தை தொடர்ந்து ஏழு ஆண்டுகள் கழித்து இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். மேஜர் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு உள்ளானது.

ரசிகர்கள் பாராட்டு: இந்நிலையில் இந்த படம் நேற்றைய தினம் தீபாவளி ரிலீசாக வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியுள்ளது. படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல் சாய் பல்லவியின் நடிப்பும் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த காட்சிகள் அரங்கு கொள்ளாத காட்சிகளாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X