களைகட்டிய வரலட்சுமி சரத்குமாரின் வரவேற்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை: நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயாவுக்கு பிறந்தவர் வரலட்சுமி. கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் ஃபேமஸான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் நிக்கோலாய் என்பவரை காதலித்துவந்தார். இருவருக்கும் தாய்லாந்தில் இன்று திருமணம் நடக்கவிருக்கிறது. இதில் உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொள்கிறார்கள். அதனையடுத்து திருமண வரவேற்பு சென்னையில் நடக்கிறது. இதில் திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.
போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த அந்தப் படம் வணிக ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக டீசண்ட்டான வரவேற்பையே பெற்றது. முக்கியமாக வரலட்சுமி தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதனால் கோலிவுட்டில் பெரும் ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போதிய பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.

வாய்ப்புகளை தவறவிட்ட வரலட்சுமி: வரலட்சுமிக்கு முதல் படம் போடா போடி என்றாலும் அவர் பாய்ஸ் படத்திலேயே அறிமுகமாகும் சூழல் உருவானது. ஆனால் சரத்குமார் அனுமதிக்காததால் அவரால் அந்தப் படத்தில் நடிக்கமுடியவில்லை. அதேபோல் காதல்,சரோஜா உள்ளிட்ட படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. சரத்குமாரின் அனுமதி கிடைக்காததால் அந்தப் படங்களிலும் வரலட்சுமியால் நடிக்க முடியாமல் போனது குறிப்பிடப்த்தக்கது.
தாரை தப்பட்டை: அவரது கரியரில் முக்கியமான படங்களில் ஒன்று தாரை தப்பட்டை. இயக்குநர் பாலா இயக்கிய அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தாலும்; வரலட்சுமிக்குள் இருக்கும் மிகச்சிறந்த நடிகை அந்தப் படத்தில் வெளியே வந்தார். அந்தப் படத்துக்கு பிறகு கண்டிப்பாக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு; நினைத்தபடி சரளமாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் பட வாய்ப்புகள் கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் படங்கள் பெரிய ஹிட்டாகவில்லை.

காதல்: இதற்கிடையே நடிகர் விஷாலை வரலட்சுமி காதலித்துவந்ததாக கூறப்பட்டது. பிறகு நிக்கோலாய் என்பவரை காதலிக்க ஆரம்பித்தார். நிக்கோலாய் மும்பையில் ஆர்ட் கேலரி ஒன்றை வைத்திருக்கிறார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து நடந்துவிட்டது. மேலும் அவருக்கு டீன் ஏஜில் ஒரு மகளும் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க இவர்களது காதலுக்கு சரத்குமார் பச்சைக்கொடி காண்பிக்க திருமண வேலைகள் மும்முரமடைந்தன.
தாய்லாந்தில் திருமணம்: அதன்படி நேற்று அவர்களது திருமணம் தாய்லாந்தில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டனர். அதற்கு முன்னதாக நடந்த ப்ரீ வெட்டிங் நிகழ்வில், ரஜினிகாந்த், திரிஷா உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் கலந்துகொண்டிருந்தனர். இதற்கிடையே திருமணம் தாய்லாந்தில் நடந்தாலும்; வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும் என்று முன்னதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
திருமண ரிசப்ஷன்: அதன்படி வரலட்சுமி - நிக்கோலாயின் திருமண வரவேற்பு இன்று நடைபெற்றது. அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். கலந்துகொண்ட அவர் இருவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு தனது வாழ்த்தினை தெரிவித்தார். அவருடன் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதியும் பங்கேற்றார். அவர்களைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கலந்துகொண்டு தனது வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டார். அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிவருகின்றன.


Click it and Unblock the Notifications











