twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “நெஞ்சுக்கு நீதி“ படத்தை ரசித்து பார்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.. படக்குழுவினருக்கு வாழ்த்து!

    |

    சென்னை : நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தைப் பார்த்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார்.

    நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற 20-ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

    நெஞ்சுக்கு நீதி படத்தின் உண்மையான ஹீரோயின் இவர் தான்...உதயநிதி சொன்ன செம தகவல் நெஞ்சுக்கு நீதி படத்தின் உண்மையான ஹீரோயின் இவர் தான்...உதயநிதி சொன்ன செம தகவல்

    நெஞ்சுக்கு நீதி

    நெஞ்சுக்கு நீதி

    பாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஆர்ட்டிகிள் 15. இந்தத் திரைப்படம் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் தமிழில் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ளார். இப்படத்தில் தான்யா ரவிசந்திரன், சிவானி ராஜசேகர், பிக்பாஸ் ஆரி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    யார்தான் ராஜா?

    யார்தான் ராஜா?

    கடந்த வாரம் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. அதில், எல்லாரும் சமம்னா யார்தான் ராஜா? என்ற வசனமும், அவங்க குடிக்கும்போது அழுக்காகாத தண்ணீர் நாங்க குடிச்சா மட்டும் அழுக்காகி விடுமா? என்ற வசனம் இடம் பெற்று அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது.

    பாராட்டிய முதல்வர்

    பாராட்டிய முதல்வர்

    இந்நிலையில், நெஞ்சுக்கு நீதி படத்தைத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பார்த்துவிட்டு படக்குழுவினர் அனைவரையும் வெகுவாக பாராட்டியுள்ளார். இது சம்பந்தமாக படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நெஞ்சுக்கு நீதி படத்தை தனியார் திரையரங்கில் பார்த்தார்.

    நேர்மையான அதிகாரி

    நேர்மையான அதிகாரி

    படத்தைப் பார்த்த தமிழக முதல்வர், நெஞ்சுக்கு நீதி படத்தின் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக்குழுவினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் குற்றத்தை எதிர்த்துபோராடும் நேர்மையான காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் நிச்சயம், உதயநிதிக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்று நம்பப்படுகிறது.

    மே 20ந் தேதி ரிலீஸ்

    மே 20ந் தேதி ரிலீஸ்

    பாலிவுட்டில் ஹிட்டான ஆர்டிகிள் 15 படத்தின் கதைக்களத்தை தமிழ்நாட்டுக்கு ஏற்றார்போல சில மாற்றங்களை செய்து அருண்ராஜா காமராஜ் நெஞ்சுக்கு நீதியை உருவாக்கியிருக்கிறார் என தெரிகிறது. இத்திரைப்படம் மே 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    English summary
    Nenjuku Neethi Trailer : உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி படத்தின் ட்ரெய்லருக்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X