twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொள்ளையடிப்பதாக கூறுவதா.. அதையே இன்னும் கட்டல.. நடிகர் பிரசன்னாவுக்கு மின் வாரியம் கடும் கண்டனம்!

    |

    சென்னை: மின்வாரியம் கொள்ளையடிப்பதாக கூறிய நடிகர் பிரசன்னாவுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    Recommended Video

    அரசை குறிவைத்த நடிகர் பிரசன்னா

    லாக்டவுன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக மின் கணக்கீடு எடுக்கப்படாத நிலையில் பழைய கட்டணத்தையே கடந்த மாதமும் கட்டலாம் என அறிவித்தது தமிழ்நாடு மின்சார வாரியம்.

    மேலும் மின்கட்டணம் செலுத்தாவிட்டாலும் மின்சாரம் துண்டிக்கப்படாது என்றும் மின்வாரியம் அறிவித்திருந்தது. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் மின் வாரியம் கணக்கெடுப்பு பணியை தொடங்கியுள்ளது.

    மின்சார வாரியம் கொள்ளையடிக்குதுன்னு எத்தனை பேரு நினைக்கிறீங்க.. பிரபல நடிகரின் டிவிட்டால் பரபரப்பு!மின்சார வாரியம் கொள்ளையடிக்குதுன்னு எத்தனை பேரு நினைக்கிறீங்க.. பிரபல நடிகரின் டிவிட்டால் பரபரப்பு!

    கொள்ளையடிக்கிறார்கள்

    கொள்ளையடிக்கிறார்கள்

    இந்நிலையில் நடிகர் பிரசன்னா தனது வீட்டிற்கு 70000 ரூபாய் மின்கட்டணம் வந்துள்ளதாக கூறினார். இதுதொடர்பாக பிரசன்னா தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த கொரோனா லாக்டவுன் நேரத்தில் மின் வாரியம் கொள்ளையடிப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

    ஹேஷ்டேக்குகள்

    ஹேஷ்டேக்குகள்

    அவரது இந்த டிவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இன்று #TNEB, #TNEBLooting ஆகிய ஹேஷ்டேக்குகளும் ட்ரென்ட் செய்யப்பட்டன. இந்நிலையில் பிரசன்னாவின் குற்றச்சாட்டு தொடர்பாக மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

    பிரசன்னாவுக்கு கண்டனம்

    பிரசன்னாவுக்கு கண்டனம்

    இதுதொடர்பாக 4 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், பிரசன்னாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையே மின்கட்டணம் கணக்கிடப்படுகிறது. நான்கு மாத மின்நுகர்வை இரண்டாக பிரித்து மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது.

    கொள்ளை அடிப்பதாக

    கொள்ளை அடிப்பதாக

    ஊரடங்கு கால கட்டத்தில் வீட்டு மின்நுகர்வு அதிகரித்துள்ளதால் மின் கணக்கெடுப்பு நடத்தும் பொழுது அதிக கட்டணம் வரும் நிலையில் மின்வாரியம் முந்தைய மாத கட்டணத்தை மட்டுமே கழித்து யூனிட்டை கழிப்பதில்லை என்று ஊடகங்களில் வரும் செய்தி தவறானதாகும். மேலும் நடிகர் பிரசன்னா மின்வாரியம், ஊரடங்கு காலகட்டம் நிறைவடைந்த பின்பு மின் கணக்கெடுப்பு என்ற முறையில் கொள்ளை அடிப்பதாகத் தவறான செய்தியை வெளியிட்டுள்ளார்.

    கண்டிக்கத்தக்கது

    கண்டிக்கத்தக்கது

    இந்த கணக்கெடுப்பு முறையானது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி நடைமுறைப்படுத்தப்படுவதால் நடிகர் பிரசன்னா தமிழ்நாடு மின்சார வாரியத்தை கடும் சொற்களால் குற்றம்சாட்டுவது கண்டிக்கத்தக்கதாகும்.

    பில் கட்டவில்லை

    பில் கட்டவில்லை

    பிரசன்னா வீட்டில் இரண்டு மின் இணைப்புகள் உள்ளன. மின் இணைப்பு எண்.328-010-60 மற்றும் 328-010-61. இந்த மின் இணைப்பு எண்.328-010-60-ஐ கணக்கீடு செய்ததில் ஜனவரி மாதம் யூனிட் 2280 மின் நுகர்வுக்கு ரூ.13,528 ஐ செலுத்தியுள்ளார். மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிப்பால் கணக்கீடு செய்ய முடியாத நிலையில் முந்தைய மாத கட்டணமான ரூ.13,528 நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த கட்டணம் இதுவரை மின்வாரியத்திற்குச் செலுத்தப்படவில்லை.

    மின் கட்டணம்

    மின் கட்டணம்

    மேற்கண்ட மின் இணைப்பில் மே மாதம் நான்கு மாதங்களுக்கான மொத்த நுகர்வு 6920 யூனிட் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 6920 யூனிட்டை மொத்தமாகக் கணக்கிட்டால் இதற்கான கட்டணம் ரூ.44,152 ஆகும்.
    ஆனால் செய்தி குறிப்பில் கூறியுள்ளபடி 6920 யூனிட்டானது இரண்டு மாத மின் கணக்கெடுப்பு அடிப்படையில் இரு இரண்டு மாத நுகர்வாகப் பிரிக்கப்பட்டு 3460 யூனிட், வீதப்பட்டியலின்படி மின் கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது.

    அதையே செலத்தவில்லை

    அதையே செலத்தவில்லை

    3460 யூனிட்டுக்கான மின் கட்டணம் ரூ.21,316 ஆகும். ஆக இரண்டு 3460 யூனிட்டுக்கான மின் கட்டணம் ரூ.42,632 ஆகும். இவற்றில் முந்தைய மாத கட்டணம் ரூ.13,528 கழிக்கப்பட்ட பின் ரூ.29,104 மட்டுமே மே மாத கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால் நடிகர் பிரசன்னா முந்தைய மாத கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்ட ரூ.13,528 ஐ செலுத்தாத காரணத்தினால் அவர் மொத்தமாகச் செலுத்த வேண்டிய தொகை ரூ.42,632 ஆக உள்ளது.

    நீட்டிப்பு..

    மின்கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஜூலை 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் ஜூன் 6 ஆம் தேதியிலிருந்து ஜூன் 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்கட்டணம் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால், www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் கேட்கலாம் என்றும் மின் வாரியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    English summary
    Tamilnadu Electricity bored condemns Actor Prasanna. Actor Prasanna said Tamilnadu EB looting in the Lockdown.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X