தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தமிழ் குமரன் வெற்றி.. 527 வாக்குகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி!
சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் GKM தமிழ்குமரன் 788 வாக்குகள் பெற்று 527 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்றவர் என்ற பெருமையை தயாரிப்பாளர் GKM தமிழ்குமரன் பெற்றுள்ளார்.

ஒரு தலைவர், இரண்டு துணைத் தலைவர், இரண்டு செயலாளர்கள், ஒரு பொருளாளர், ஒரு இணைச் செயலாளர், 26 செயற்குழு உறுப்ப்பினர்கள் என மொத்தம் 33 பதவிகளுக்கு 100 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ராம நாராயணன் அணி என்று ஒரு அணியும் நலம் காக்கும் அணி என்று ஒரு அணியும் என மொத்தம் இரண்டு அணிகள் போட்டியிட்டது. இதில் நலன் காக்கும் அணி சார்பில் போட்டியிட்ட ஜி.கே.எம் தமிழ்குமரன் 788 வாக்குகள் பெற்று 527 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பதிவான வாக்குகள்: மொத்தம் 1, 524 பேருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது. ஆனால் 1170 வாக்குகளே பதிவானது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் தமிழ்குமரன் 788 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளியை விட 527 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தேர்தலை ஓய்வு பெற்ற நீதியரசர் ராஜேஸ்வரன் தலைமை தேர்தல் அதிகாரியாக முன் நின்று நடத்தினார். சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் தேர்தல் காலை 8 மணியில் இருந்து நடைபெற்றது.


Click it and Unblock the Notifications











