Kamal X Udhay: வரி குறைப்பு.. கோரிக்கை வைத்த கமல்.. பச்சை கொடி காட்டிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப கேளிக்கை வரி என்பது வசூலிக்கப்படுகிறது. அதுவும் பொழுதுபோக்கு தளத்தில் இருப்பவைகளுக்கு வசூலிக்கப்படும் இந்த வரிகள் விளையாட்டு, சினிமா, கலை நிகழ்ச்சிகள் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அளவிலான தன்மையில் வசூல் செய்யப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சினிமாவுக்கு கேளிக்கை வரியாக சினிமாவுக்கு 8 சதவீதம் வசூலிக்கப்படுகிறது.

இந்த வரி வசூலை 8 சதவீதத்தில் இருந்து குறைக்க வேண்டும் என நடிகரும் இந்திய சினிமாவின் முகமாகவும் இருக்கும் கமல்ஹாசன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது கோரிக்கையை முன் வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டிருந்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னதாக பேசிய நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், " தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் அரசு எப்போதும் தமிழ் சினிமாவுக்கு நல்ல விஷயங்களைச் செய்துள்ளது. அப்படியான அரசிடம் திரைத்துறை சார்பில் கோரிக்கை ஒன்றை முன் வைக்கிறேன். சினிமாவுக்கு வசூலிக்கும் கேளிக்கை வரியை தமிழ்நாடு அரசு குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

Tamilnadu Government Reduce Local Body Entertainment Tax From 8 to 4 After Kamal Haasan Request

கமல் - உதயநிதி: அதன் பின்னர் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாசனின் கோரிக்கைக்கு பதில் அளிக்கும் விதமாக பேசினார். அவர் பேசுகையில், " கமல் சார் பேசும்போது பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு வைத்தார். நகராட்சி நிர்வாகத்தில் வசூலிக்கப்படுகிற Local Body Entertainment Tax-இல் முழு வரி விலக்கு வேண்டும் என்று இங்கே கோரிக்கை வைத்திருந்தார். உங்கள் கோரிக்கையின் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து எனக்கு நன்றாகவே தெரியும். உங்களுடைய கோரிக்கையை நான் நமது முதலமைச்சரிடம் எடுத்துச் செல்வேன். நீங்கள் எல்லோரும் மகிழ்கின்ற வகையிலான அறிவிப்பை முதலமைச்சர் அடுத்து நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் தெரிவிப்பார்" என்று பேசினார். தற்போது இவர்கள் பேசியது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

வரி குறைப்பு: இந்நிலையில் தமிழ்நாடு அரசு திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியினை 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைத்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை தமிழ்நாடு நடிகர் சங்கத் தலைவர் நாசர் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் 5ஆம் தேதி தக் லைஃப் படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரோமோசன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசும்போது கன்னட மொழி குறித்து பேசியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தக் லைஃப் படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

ரிலீஸ் பிரச்னை: குறிப்பாக கர்நாடக அமைப்பினர் பலரும் தமிழ்நாட்டில் படம் வெளியாகாது என்று தெரிவித்து வருகிறார்கள். படம் கர்நாடகாவில் வெளியாக வேண்டும் என்றால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்து வருகிறார்கள். ஆனால் கமல்ஹாசனோ அன்பு மன்னிப்பு கேட்காது என்று தெரிவித்துள்ளார். இதனால் இந்த பிரச்னை எங்கு போய் முடியும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் கமல்ஹாசனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X