twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமா தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி.. திரையுலகினர் வரவேற்பு!

    By
    |

    சென்னை: சினிமா தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

    Recommended Video

    சென்னை: இனி.. எல்லாரும் தியேட்டருக்கு போலாம்.. 100% இருக்கைக்கு ‘ஓகே’ சொன்ன தமிழக அரசு..!

    உலகம் முழுவதும் மிரட்டிய கொரோனா காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது.

    நான் அந்தளவுக்கு கேவலமானவன் இல்ல.. ஆவேசமான ரியோ.. மீண்டும் நாமினேஷனில் ஆரி? நான் அந்தளவுக்கு கேவலமானவன் இல்ல.. ஆவேசமான ரியோ.. மீண்டும் நாமினேஷனில் ஆரி?

    இதன் காரணமாக, மூடப்பட்ட தியேட்டர்களை திறக்க மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் அனுமதி அளித்தது.

    விபிஎப் கட்டணம்

    விபிஎப் கட்டணம்

    தமிழக அரசும், 50 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது. இதையடுத்து 8 மாதத்துக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் விபிஎப் பிரச்சனையை கையில் எடுத்தனர். விபிஎப் கட்டணத்தை தயாரிப்பாளர்கள் கட்ட முடியாது என்று கூறினர்.

    தியேட்டருக்கு வரவில்லை

    தியேட்டருக்கு வரவில்லை

    இதனால் புதிய படங்கள் ரிலீசில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் அந்த பிரச்சனை தீர்க்கப்பட்டு படங்கள் ரிலீஸ் ஆயின. ஆனால், எதிர்பார்த்த ரசிகர்கள் தியேட்டருக்கு வரவில்லை. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.மிக குறைந்த ரசிகர்களே தியேட்டருக்கு வந்ததால், பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

    பெரிய படங்கள்

    பெரிய படங்கள்

    இந்நிலையில் பெரிய படங்கள் ரிலீஸானால், ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள் என தியேட்டர் அதிபர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை அவர்கள் அதிகமாக எதிர்பார்க்கின்றனர். இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.

    விஜய் கோரிக்கை

    விஜய் கோரிக்கை

    இதற்கிடையே, நடிகர் விஜய், தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து, தியேட்டர்களில் நூறு சதவிகித இருக்கைக்கு கோரிக்கை வைத்திருந்தார். நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. அவரும் இந்த கோரிக்கையை வைத்திருந்தார்.

    அரசு அனுமதி

    அரசு அனுமதி

    திரையுலகினர் பலர், நூறு சதவிகித இருக்கைக்கு அனுமதிக்குமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு நூறு சதவிகித இருக்கைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இதை திரையுலகினர் வரவேற்றுள்ளனர். அவர்கள் தமிழக அரசுக்கு நன்றி
    தெரிவித்துள்ளனர்.

    English summary
    Tamilnadu Govt allowed 100% occupancy in theatres.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X