twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல்வர் நிவாரண நிதிக்கு வாரி வழங்கிய நடிகர்கள்.. அஜீத் நம்பர் 1.. லிஸ்ட்டில் ரஜினி.. விஜய் இல்லை!

    |

    சென்னை: கொரோனா தடுப்பு மற்றும் பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலில் நடிகர்கள் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    Recommended Video

    Rajinikanth wishing for tamil new year 2020

    உலக நாடுகள் பலவற்றையும் மிரளவிட்டு வரும் கொரோனா வைரஸ், இந்தியாவையும் அலறவிட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது.

    கொரோன வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் பிறப்பிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    பேசியதைவிட 2 மடங்கு சம்பளம் கொடுத்து உதவினார் ராகவா லாரன்ஸ்.. சம்பத்ராம் உருக்கம்!பேசியதைவிட 2 மடங்கு சம்பளம் கொடுத்து உதவினார் ராகவா லாரன்ஸ்.. சம்பத்ராம் உருக்கம்!

    நிவாரணப் பணிகள்

    நிவாரணப் பணிகள்

    இதனால் தொழில்துறை முற்றிலும் முடங்கியுள்ளதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் மக்களிடம் அதாவது தொழில் அதிபர்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் அரசுக்கு கொரோனா தடுப்பு பணிகளுக்காக நன்கொடை வழங்குமாறு என கோரிக்கை விடுத்து வருகின்றன.

    கடந்த 7 நாட்களில்

    கடந்த 7 நாட்களில்

    அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தமிழக மக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனைக் கேட்டு பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த 7 நாட்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலை தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ளது.

    அஜித் டாப்

    அஜித் டாப்

    அதன்படி நடிகர் அஜித்துகுமார் 50 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறார். ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் 50 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் ரூபாய் வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரஜினி விஜய் இல்லை

    ரஜினி விஜய் இல்லை

    இந்த பட்டியலில் மாஸ் நடிகர்களாக கருதப்படும் ரஜினி, விஜய் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. தமிழக அரசுக்கு கடந்த 7 நாட்களில் மட்டும் 54 கோடியோ 88 லட்சம்மு 940 ரூபாய் வரப்பெற்றுள்ளது என்றும் இதுவரை மொத்தமாக 134 கோடியே 63 லட்சத்து 54 ஆயிரத்து 364 ரூபாய் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Tamilnadu govt announces the Corona relief fund donner list. Actors Ajith and Sivakarthikeyan And AGS entertainment names are in the list.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X