இதற்குத்தான் காத்திருந்தோம்... சாமி 2வையும் விட்டு வைக்காத தமிழ்ப்படம் 2.0

சாமி 2 படத்தை கேலி செய்யும் விதமாக தமிழ்படம் 2.0 புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளது.

Recommended Video

சாமி 2 வையும் விட்டு வைக்காமல் கலாய்த்த தமிழ்ப்படம் 2.0!- வீடியோ

சென்னை: சாமி 2 படத்தினை கேலி செய்து தமிழ்ப்படம் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ்ப்படம் 2.0வின் டிரெய்லர் வெளியானது. முதல்பாகத்தைப் போலவே அதிலும் பல தமிழ்ப்படங்களைக் கலாய்த்திருந்தனர். கூடவே, தமிழகத்தில் நடந்த சில அரசியல் நிகழ்வுகளையும் கேலி செய்திருந்தனர். தமிழ்ப்படம் டிரெய்லரில் கலாய்க்கப்பட்ட தமிழ்ப்படங்கள் எவை என்பது பற்றி சிறிய ஆராய்ச்சியே நடத்தும் அளவிற்கு அதில் அத்தனை படங்கள் சிக்கி சின்னாபின்னமாகி இருந்தன.

Tamilpadam 2.0 next poster released

இந்நிலையில், நேற்று முன்தினம் விக்ரமின் சாமி 2 பட டிரெய்லர் வெளியானது. 15 ஆண்டுகளுக்கு முன் மாபெரும் வெற்றி கண்ட சாமி படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் அதன் டிரெய்லருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ஹரி படங்களுக்கே உரித்தான அத்தனை அம்சங்களுடன் உள்ள அந்த டிரெய்லருக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், அந்த டிரெய்லரையும் விட்டு வைக்க விரும்பாத தமிழ்ப்படம் 2.0 படக்குழு, அது தொடர்பான புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. சாமி படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தின் பெயர் ஆறுச்சாமி. அதனைக் கலாய்க்கும் விதமாக இந்த போஸ்டரில் ஏழுச்சாமி கமிஷ்னர் ஆப் போலீஸ் என உள்ளது.

அப்படியென்றால் தமிழ்ப்படம் 2.0 குழுவிடம் இருந்து ஆறுச்சாமியும் தப்பவில்லை. நிச்சயம் படத்தில் சாமி 2வையும் கலாய்த்திருக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X