Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
ஜுலை 12 ஆம் தேதி தமிழ்ப்படம் 2 ரிலீஸ் ஆகிறதா?
சென்னை: மிர்ச்சி சிவாவின் தமிழ்ப்படம் 2 ஜூலை 12 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
2011 நம்ம கையில... என்ற பாடல் வரியோடு 2010ல் வெளியான திரைப்படம் தமிழ்ப்படம். தமிழ் சினிமாவின் மொத்த வரலாறையுமே அடித்து துவைத்து காயப்போட்டு பரபரப்பை கிளப்பியது.
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்து வெளிவந்த இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் வருமா என்று ஏங்கிய ரசிகர்களுக்காகவே, இப்போது இரண்டாம் பாகம் "தமிழ்ப்படம் 2" என்ற பெயரில் தயாராகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி முன்பு சிவா அமர்ந்து தியானம் பண்ணுவதுபோல் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்து இந்த படத்தின் வெற்றி துவங்கியுள்ளதாக எடுத்துக்கொள்ளலாம்.
Basically I am a watch mechanic என்று எழுதப்பட்ட அட்டை மேசை மீது இருக்கும்போதே 24 படத்தின் சூர்யா போன்று ஒருவர் பேசிக்கலி ஐம் எ வாட்ச் மெக்கானிக் என்று சிவாவிடம் அறிமுகம் செய்யும் காட்சியோடு துவங்கும் புதிய வீடியோவும் டிரெண்ட் ஆகியுள்ளது.
பாகுபலி, காலா என்று பல படங்களின் போஸ்டர்களை ஸ்பூப் செய்ததன் மூலம் சி.எஸ். அமுதனின் படக்குழு கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில் சி.எஸ் அமுதன் மற்றும் தயாரிப்பாளர் சஷிகாந்த்தின் ட்விட்டர் உரையாடல்கள் பட ரிலீசுகான முன்னோட்டமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
ட்விட்டரில் சி.எஸ் அமுதன், 12 ஆம் தேதி என்ன திட்டம் என்று கேட்க, அதற்கு நான் ப்ரீயாக இருக்கிறேன் உங்களுக்கு படத்திற்கு போக விருப்பமா என சஷிகாந்த் கேட்கிறார். எதாவது சுவாராஸ்யமாக போகிறதா என அமுதன் செய்யும் ரிப்ளைக்கு, சுவாரஸ்யமாக ஒன்று வரப்போகிறது... பார்க்கலாம் என பதிலளித்துள்ளார்.
இதனடிப்படையில் பார்க்கும்போது ஜூலை 12 பட ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!