முதல் நாள் மேட்னி ஷோ முடியறதுக்குள்ள தமிழ்ராக்கர்ஸில் தர்பார் லீக்.. டென்ஷனில் தயாரிப்பு நிறுவனம்
Recommended Video
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினியின் தர்பார் திரைப்படம் தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் பைரசி தளங்களில் லீக் ஆகியுள்ளன.
தர்பார் திரைப்படத்தை சட்ட விரோதமாக 1370 ஆன்லைன் தளங்களில் வெளியிடக்கூடாது என கோர்ட் தடை விதித்திருந்தாலும், அதனை மீறி தர்பார் படம் தற்போது ஆன்லைனில் வெளியாகியுள்ளது.
படம் ரிலீசான பத்து மணி நேரத்தில் ஆன்லைனில் தர்பார் வெளியானதால், படத் தயாரிப்பு நிறுவனமான லைகாவிற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என கருதப்படுகிறது.

முதல் நாளிலேயே
லைகா நிறுவனம் தயாரிப்பில் அதிக பொருட்செலவில் ரஜினியின் தர்பார் படம் உருவாகியுள்ளது. படம் வெளியான முதல் நாளிலேயே தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன், குட்டி மூவிஸ் போன்ற ஆன்லைன் பைரஸி தளங்களில் தர்பார் படம் லீக்காகியுள்ளது.

டவுன்லோடு
தர்பார் படத்தை பார்க்க தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வந்தாலும், டிக்கெட் கிடைக்காத விரக்தியில் இருக்கும் ரசிகர்கள் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் பைரஸி தளங்களில் தர்பார் வெளியானவுடன் சுடச்சுட டவுன்லோடு செய்து பார்த்து வருகின்றனர்.

கஷ்டம்
இதுபோன்று அதிக பட்ஜெட்டில் எடுக்கும் புதிய படங்களை தொலைக்காட்சிகளிலேயே ஒரு மாதத்திற்குள் ஒளிபரப்பக் கூடாது என கொடி பிடித்து வரும் வேளையில் படம் வெளியான கொஞ்ச நேரத்திலேயே இப்படி திருட்டுத்தனமாக லீக்கானால் தயாரிப்பாளர்களுக்கு ரொம்ப கஷ்டத்தையும் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்ராக்கர்ஸ்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்தை முதல் நாளிலேயே வெளியிடுவோம் என ட்வீட் போட்டு தமிழ் ராக்கர்ஸ் அதேபோன்று வெளியிட்டது. கடந்த ஆண்டு வெளியான அத்தனை பெரிய படங்களும் முதல் நாளிலேயே வெளியாகி தயாரிப்பு தரப்புக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தர்பார் படத்துக்கும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளது.

வி.பி.என்
தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் பைரஸி தளங்களை கணக்குக்காக முடக்கினாலும், வி.பி.என் கொண்டு ஈஸியாக திறந்து கொள்ளலாம் என்ற சாதாரண தொழில் நுட்பம் அனைத்து சாமானியர்களுக்கும் தெரிந்திருக்கும் போது, அதனை தடுக்க பெரிய அளவில் ரியல் முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே ஆன்லைன் பைரஸி ஆபத்தில் இருந்து புதிய படங்களை காப்பாற்ற முடியும்.


Click it and Unblock the Notifications