மூனு வருஷ போராட்டம்.. முதல் நாளிலேயே இப்படி பண்ணிட்டாங்களே.. தனுஷ் படமும் தப்பவில்லை!
Recommended Video
சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் நேற்று வெளியான எனை நோக்கிப் பாயும் தோட்டா முதல் நாளிலேயே ஆன்லைன் பைரசிக்கு இரையாகியுள்ளது.
மூன்று ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயவால், ஒரு வழியாக நேற்று எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் வெளியானது.
முதல் நாளிலேயே ஆன்லைன் பைரசிக்கு தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா படமும் இரையாகியுள்ளது தயாரிப்பாளர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

காலாவதி
மூன்று ஆண்டுகள் ஆனதால், படம் காலாவதி ஆகியிருக்கும் என்ற விமர்சனத்தை எல்லாம் தவிடு பொடியாக்கி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்று தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி வருகிறது எனை நோக்கிப் பாயும் தோட்டா.

தலைவலி
எந்த ஒரு புதுப்படம் வெளியானாலும், முதல் நாளிலேயே அந்த படம் ஆன்லைனில் பைரசியாக வெளியாகி விடுகிறது. தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன், தமிழ் யோகி, குட்டி மூவிஸ் உள்ளிட்ட ஆன்லைன் பைரசி தளங்கள் தயாரிப்பாளர்களுக்கு தலைவலியாக மாறியுள்ளது.
தப்பவில்லை
எனை நோக்கிப் பாயும் தோட்டா ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், முதல் நாளிலேயே ஆன்லைன் பைரசியில் இருந்து தப்பமுடியாமல் மாட்டிக் கொண்டது. அதுவும் ட்வீட் போட்டு பகிரங்கமாக பைரசி படங்களை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டு வருவதை எல்லாம் யார் தான் தடுக்கப் போகிறார்களோ தெரியவில்லை.

தியேட்டர்ல பாருங்க
யாரும் ஆன்லைனில் திருட்டுத் தனமாக படம் பார்க்காதீங்க, படம் நல்லா இருக்கு தியேட்டருக்குப் போய் பாருங்க என சமூக வலைதளங்களில் தனுஷ் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











