தொடர்ந்து வேலையை காட்டும் தமிழ்ராக்கர்ஸ்.. இந்தப் படத்தையும் விட்டு வைக்கலையே.. படக்குழு அதிர்ச்சி!
சென்னை: சமீபத்தில் ரிலீஸ் ஆன, தெலுங்கு படத்தை தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளது.
தமிழில் வெளியாகும் படங்களை, ரிலீஸ் ஆன சில மணி நேரங்களிலேயே திருட்டுத்தனமாக வெளியிடுவதை தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் செய்து வந்தது.
இதற்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டும் இதை செய்தது யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

எல்லை தாண்டி
இந்நிலையில், தமிழ்ப் படங்களை மட்டும் திருட்டுத்தனமாக வெளியிட்டு வந்த இந்த தமிழ் ராக்கர்ஸ், எல்லை தாண்டி மற்ற மொழிப் படங்களையும் வெளியிடத் தொடங்கியது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்திப் படங்களையும் இந்த இணையதளம் தொடர்ந்து திருட்டுத் தனமாக வெளியிட்டு வருகிறது.

ஸோம்பி ரெட்டி
படம் வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த இணையதளமும் வெளியிட்டு விடுகிறது. ஓடிடியில் வெளியாகும் படங்களையும் கூட விட்டுவைப்பதில்லை. சில வெப் தொடர்களையும் அப்படியே வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், இப்போது நேற்று வெளியான ஸோம்பி ரெட்டி என்ற தெலுங்கு படத்தையும் வெளியிட்டுள்ளது.

'கயல்' ஆனந்தி
இந்தப் படத்தில், 'கயல்' ஆனந்தி ஹீரோயினாக நடித்துள்ளார். சஜ்ஜா தேஜா, ஹர்ஷவர்தன், ரகுபாபு, ஹரி தேஜா உட்பட பலர் நடித்துள்ளனர். பிரசாந்த் வர்மா இயக்கியுள்ள இந்தப் படத்தை ராஜ்சேகர் வர்மா தயாரித்துள்ளார். இது தெலுங்கில் உருவாகியுள்ள முதல் ஸோம்பி வகை படம். இது கொஞ்சம் கொரோனா வைரஸ் பற்றியும் பேசுகிறது.

தமிழ்ராக்கர்ஸ்
இந்தப் படம் நேற்று வெளியான நிலையில், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் படத்தைப் பாராட்டி விமர்சனங்கள் வந்துள்ள நிலையில், தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் இதை திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications