எல்லைதாண்டிய தமிழ் ராக்கர்ஸ்... அந்தப் படங்களையும் லீக் பண்ணிட்டாங்களாம்!
சென்னை: தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக, மகேஷ்பாபு மற்றும் அல்லு அர்ஜுன் நடித்த தெலுங்கு படங்களையும் லீக் செய்துள்ளது.
Recommended Video
தெலுங்கு சினிமாவின் பிரின்ஸ் என்று கூறப்படும் மகேஷ் பாபு நடித்துள்ள படம் சரிலேரு நீக்கெவ்வரு. இதில், ராணுவ வீரராக நடித்துள்ள மகேஷ் பாபு ஜோடியாக, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் விஜயசாந்தி நடித்துள்ளார்.
பிரகாஷ் ராஜ், பிரதீவ் ராவத், ராஜேந்திர பிரசாத் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த 11 ஆம் தேதி ரிலிஸ் ஆகி வரவேற்பை பெற்றுள்ளது.

திரிவிக்ரம்
அதோடு அல்லு அர்ஜுன் நடித்துள்ள, அல வைகுந்தப்புரமுலூ என்ற படம் கடந்த 12 ஆம் ரிலீஸ் ஆனது. இதை திரிவிக்ரம் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார்.

நிவேதா பெத்துராஜ்
மற்றும் ஜெயராம், நவ்தீப், நிவேதா பெத்துராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ளார். இந்தப் படமும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் ராக்கர்கள்
இந்த இரண்டு படங்களையும் வெளியான அன்றே தமிழ் ராக்கர்கள் இணையதளம் திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளது. இதனால் இந்தப் பட தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மெகா பட்ஜெட்
இரண்டும் மெகா பட்ஜெட் படம் என்பதால் திருட்டுத்தனமாக இப்படி ரிலீஸ் ஆகியிருப்பது வசூலை பாதிக்கும் என்று அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தெலுங்கு படங்கள்
தமிழ் சினிமாவை மட்டுமே திருட்டுத்தனமாக வெளியிட்டு வந்த தமிழ்ராக்கர்ஸ் இணையதளம், கடந்த சில வருடங்களாக தெலுங்கு படங்களையும் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











