அட்ராசக்க.. அட்ராசக்க.. தமிழ்ராக்கர்ஸ் செய்யுற இந்த வேலையை பார்த்து சிரிக்கிறதா அழுவுறதானே தெரியலையே
புதுப்படங்களை திருட்டுத்தனமான ஆன் லைனில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் தினசரி எபிசோட்களையும் உடனுக்குடன் வெளியிட்டு வருகிறது.
சென்னை: புதுப்படங்களை திருட்டுத்தனமான ஆன் லைனில் வெளியிடும் தமிழ் ராக்கர்சின் கவனம் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது திரும்பி இருக்கிறது.
தமிழில் வெளியாகும் புதிய படங்களை திருட்டுத்தனமாக ஆன் லைனில் வெளியிடும் இணையதளம் தமிழ்ராக்கர்ஸ். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு இது மிகப்பெரிய தலைவலியாய் இருந்து வருகிறது.

புதுப்படங்கள் ரிலீசாகும் அன்றைய தினமே பல படங்களை வெளியிட்டுவிடுகிறது. இதனை பதிவிறக்கம் செய்வதற்கென்றே ஒரு கூட்டமே இருக்கிறது. கடந்த வாரம் ரிலீசான கடாரம் கொண்டான், தி லயன் கிங், ஆடை ஆகிய படங்களை திருட்டுதனமாக வெளியிட்டு அதிரவைத்துள்ளது தமிழ் ராக்கர்ஸ்.
இந்நிலையில், தமிழ்ராக்கர்ஸ்சின் கவனம் பிக் பாஸ் சின்னத்திரைப் பக்கம் திரும்பியுள்ளது. சின்னத்திரையில் அதிக டிஆர்பியை கொண்ட பிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியின் தினசரி எபிசோட்களை அன்றைய தினமே தனது இணையதளத்தில் வெளியிடுகிறது தமிழ்ராக்கர்ஸ். இதனால் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சினிமா துறையினராலேயே தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தை தடுக்க முடியவில்லை. தொலைக்காட்சி நிறுவனங்கள் இதனை எப்படி தடுக்கப் போகின்றன என்பது தெரியவில்லை. தமிழ்ராக்கர்ஸ் இணையத்தால், ஹாட்ஸ்டாருக்கு தான் வருவாய் இழப்பு ஏற்படும் என்பது குறிப்படத்தக்கது.


Click it and Unblock the Notifications











