‘பர்ஸ்ட் ஷோவுக்கு முன்னாடியே முழுப்படத்தையும் ரிலீஸ் பண்ணுவோம்’.. காலாவை மிரட்டும் தமிழ்ராக்கர்ஸ்

காலா திரைப்படத்தை முன்கூட்டியே இணையத்தில் வெளியிடுவோம் என தமிழ்ராக்கர்ஸ் மிரட்டல் விடுத்துள்ளது.

சென்னை: ரஜினியின் காலா படம் அதிகாரப்பூர்வமாக திரைக்கு வருவதற்கு முன்னதாகவே, அதனை தங்களது இணையதளப் பக்கத்தில் வெளியிடுவோம் என தமிழ்ராக்கர்ஸ் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கபாலி பட வெற்றியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரிராய், ஹீமோ குரோஷி என இரண்டு நாயகிகள். இவர்களுடன் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரித்துள்ள இப்படம் அடுத்தமாதம் 7ம் தேதி திரைக்கு வருகிறது.

வரவேற்பு:

வரவேற்பு:

ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பிற்கு பின் ரிலீசாகும் படம் என்பதால், காலாவிற்கு மக்களிடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே வெளியான அப்படத்தின் பாடல்கள், டீசர் உள்ளிட்டவற்றிற்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது.

டிரெண்டிங்:

டிரெண்டிங்:

இந்நிலையில், நேற்று இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. யூடியூப்பில் வெளியான இந்த டிரெய்லரை சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்தனர். தொடர்ந்து இந்த டிரெய்லரை ரசிகர்கள் பார்த்து வருவதால், அந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காலாவின் டிரெய்லர் வீடியோவிற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் ராக்கர்ஸ்:

தமிழ் ராக்கர்ஸ்:

அந்தவகையில், தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், " நாங்கள் இப்படத்தை முதல் நாள் முதல் காட்சிக்கு முன்பே வெளியிடுவோம்' என தெரிவித்துள்ளனர். இது காலா படக்குழுவையும், ரஜினி ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மிரட்டல்:

மிரட்டல்:

திருட்டு விசிடி மற்றும் புதிய படங்கள் இணையத்தில் உடனடியாக வெளியாவதை ஒழிக்க தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பெரும் பாடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புதிய தமிழ்ப் படங்களை ரிலீசான உடன் இணையத்தில் திருட்டுத்தனமாக பதிவிட்டு வரும் தமிழ் ராக்கர்ஸ், பெரிதும் எதிர்பார்க்கப்படும் காலா படத்திற்கு இப்படியான ஒரு அதிரடி மிரட்டலை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரிலீஸ் அன்றே ரிலீஸ்:

ரிலீஸ் அன்றே ரிலீஸ்:

முன்னதாக ரஜினியின் கபாலி படத்தின் போது, அதன் தயாரிப்பாளர் தாணு புதிய படங்களை இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிடுவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அப்போது அதனை விசாரித்த நீதிபதி, ‘சட்டவிரோதமாக திரைப்படங்களை வெளியிடும் 225 இணைய தளங்களை முடக்க உத்தரவிட்டார். ஆனபோதும், கபாலி பட ரிலீஸ் அன்று அதிகாலையிலேயே அப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானது நினைவு கூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X