வெப் சீரிசில் கால் பதிக்கும் ஏவிஎம்.. சைபர் க்ரைமின் இருண்ட பக்கங்கள்.. “தமிழ் ராக்கர்ஸ்“!

சென்னை: புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் புரடக்சன்ஸ் முதல் முறையாக ஓடிடி தளத்தில் கால்பதித்துள்ளது.

Recommended Video

Suzhal Web Series Review | Yessa ? Bussa ? | Aishwarya Rajesh | Kathir |R. Parthiban | *Review

ஏவிஎம் கமல்ஹாசனின் முதல் படமான களத்தூர் கண்ணம்மா, சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தி, எம்.ஜி.ஆரின் அன்பே வா, கமலின் சகலகலா வல்லவன், ரஜினியின் நல்லவனுக்கு நல்லவன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த 80 ஆண்டுகள் பழமையான நிறுவனமாகும்.

அண்மையில், ஏவிஎம் நிறுவனத்தின் நான்காம் தலைமுறையினரான ஏவிஎம் நிறுவனர் மெய்யப்பனின் பேத்தி பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் ஏவிஎம் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

அசுர வளர்ச்சி

அசுர வளர்ச்சி

திரையரங்கில் எந்த அளவுக்கு திரைப்படங்கள் வெளியாகிறதோ, அதே போல திரைப்படங்களை ஓடிடி தளங்கள் போட்டிபோட்டுக்கொண்டு வெளியிட்டு வருகின்ற ஓடிடி நிறுவனங்கள். ஓடிடி என்றால் என்ன என்று தெரியாது இருந்த நமக்கு கொரோனாவுக்கு பின் ஓடிடி தளத்தின் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக உள்ளது. இதனால், நிறுவனங்களும் திரைப்படங்கள்,வெப்தொடர்கள், அந்தாலஜி திரைப்படங்கள் என அனைத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.

“தமிழ் ராக்கர்ஸ்“

“தமிழ் ராக்கர்ஸ்“

புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் புரடக்சன்ஸ் முதல் முறையாக சோனிலிவ் தளத்தில் "தமிழ் ராக்கர்ஸ்" என்ற வெப் தொடரை வெளியிட உள்ளது. இந்த இணையத் தொடரில் அருண் விஜய் முதன்மை பாத்திரத்திலும், நடிகை வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சைபர் க்ரைமின் இருண்ட பக்கங்கள்

சைபர் க்ரைமின் இருண்ட பக்கங்கள்

இணையத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்க குற்றங்களும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பைரஸி சைபர் க்ரைம் பின்னால் இருக்கும் இருண்ட பக்கத்தை "தமிழ் ராக்கர்ஸ்" தொடர் தோலுரித்து காட்ட உள்ளது. இந்த தொடரை அறிமுக இயக்குநர் அறிவழகன் இயக்க, மனோஜ் குமார் கலைவாணன் எழுத, புகழ்மிகு ஏவிஎம் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அருண்விஜய்யின் மிரட்டலான நடிப்பில்

அருண்விஜய்யின் மிரட்டலான நடிப்பில்

சமீபகாலமாக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருண் விஜய் முதன் முறையாக இணைய தொடரில் நடித்துள்ளார். ருத்ரா என்ற காவல்துறை அலுவலரின் கதாபாத்திரத்தில் அருண்விஜய் நடித்துள்ளார். சமீப காலங்களில் அதிகம் பேசப்படும் தொடர்களை, ரசிகர்கள் கொண்டாடும் படைப்புகளை வெளியிட்டு வரும் சோனிலிவ் தளத்தில், தமிழ் ராக்கர்ஸ் விரைவில் வெளியாக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X