»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகும் தமிழ் பாடல்களுக்கு ரூ. 2 மட்டுமேராயல்டியாகத் தரப்படுகிறது. இது தமிழ் மொழியைக் கேவலப்படுத்துவதாக உள்ளதாகதென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கூறியுள்ளது.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கோதண்டராமையா இதுகுறித்துநிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்திலுள்ள அகில இந்திய வானொலி நிலையங்கள், தமிழ் பாடல்களைஒலிபரப்பி வருகின்றன. இந்தப் பாடல்களுக்கான ராயல்டியாக ஒரு பாடலுக்கு ரூ. 2வழங்கப்படுகிறது. இது 1960-ம் ஆண்டிலிருந்து கொடுக்கப்படுகிறது.

ஆனால் இந்தி மற்றும் ஆங்கிலப் பாடல்களுக்கு ராயல்டியாக 12 ரூபாய்வழங்கப்படுகிறது. இந்த மொழிகளை விட தமிழ் தரம் குறைந்ததாக மத்தியஒலிபரப்புத் துறை கருதுகிறதா?.

தமிழ் பாடல்களுக்கு உலக அரங்கில் ஏற்பட்டுள்ள வரவேற்பை குறைக்கும் விதமாகமத்திய அரசு செயல்படுகிறது. அனைத்து மொழிப் பாடல்களுக்கும் ஒரே மாதிரியாக,பாடலுக்கு 25 ரூபாய் என்று ராயல்டி தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும்.

டெல்லி, தூர்தர்ஷனின் தேசிய ஒளிபரப்பில் தமிழ் திரைப்படங்கள்ஒளிபரப்பப்படுவதில்லை. இந்தி திரைப்படங்களே வருகின்றன. ஆனால் இவ்வாறுஒளிபரப்பாகும் இந்திப் படங்களில் பெரும்பாலானவை தமிழிலிருந்து மொழி மாற்றம்செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தி திரைப்படங்களுக்கு ரூ. 10.2 லட்சம் வரை ராயல்டி அளிக்கப்படுகிறது. ஆனால்அதே சமயம் விருது பெற்ற மாநில மொழித் திரைப்படங்களுக்கோ 1லட்சம் ரூபாய்மட்டுமே ராயல்டியாக அளிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் விற்பனை வரிய 10 சதவிகிதம் என்று ஒரே அளவில்நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

ஐ.ஏ.என்.எஸ்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil