twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தொடங்கியது தமிழ் திரை டிவி தமிழ்த் திரை தொலைக்காட்சி முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் இயக்குனர்கள் சங்கம் உள்பட தமிழ் சினிமாத்துறையின் பல்வேறு அமைப்புகள்ஒருங்கிணைந்து தமிழ்த் திரை என்ற தொலைக்காட்சியை உருவாக்கியுள்ளன.கடந்த சில வாரங்களாக சோதனைரீதியில் ஒளிபரப்பாகி வந்த இந்த சேனல், வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவைக்கப்பட்டது.சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய கட்டட வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் தாசரி நாராயண ராவ்அலைவரிசையை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசுகையில், பாரதிராஜா தொடுவதில்லை, தொட்டால் விடுவதில்லை. அதற்கு இந்த தமிழ்த் திரைத்தொலைக்காட்சி ஒரு உதாரணம்.தொடங்குவது எளிது, தொடருவது அரிது. கலை உலகில் எல்லோரும் இரும்புதான், அத்தனை இரும்புகளும் பாரதிராஜா என்ற காந்தமலையில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன என்று பாரதிராஜாவுக்கு புகழாரம் சூட்டினார்.குஷ்பு பேசுகையில், நான் மும்பையில் பிறந்து வளர்ந்து, தமிழரை திருமணம் செய்து கொண்டு, 2 குழந்தைகள் பெற்று இப்போதுதமிழகத்தின் மருமகளாகியுள்ளேன். இந்த டிவியால் தமிழ் சினிமாவுக்கு இப்போது புதிய அந்தஸ்து கிடைத்துள்ளது. இந்த அலைவரிசைதமிழ் திரைப்படத் துறைக்கு புதிய கெளரவத்தைத் தேடிக் கொடுத்துள்ளது என்றார்.நிகழ்ச்சியில், இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, எஸ்.ஏ.சந்திரசேகர், ஷங்கர், பாலு மகேந்திரா,எஸ்.ஜே.சூர்யா, சேரன் உள்ளிட்டோரும், இசையமைப்பாளர் இளையராஜா, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், நடிகர், நடிகையர் உள்ளிட்டோர் கலந்து காண்டனர்.பாரதிராஜா நிறைவுரையாற்றுகையில், ஒவ்வொரு தமிழனின் மூச்சிலும் தமிழ்த் திரை குடி கொண்டிருக்கும். திரை அம்சங்கள்மட்டுமல்லாது, அதையும் தாண்டி மனித வள மேம்பாடுகளையும் பிரதிபலிக்கும் வகையிலான நிகழ்ச்சிகளை இந்த அலைவரிசைஒளிபரப்பும்.இந்த அலைவரிசை உருவாகி, பிறப்பெடுக்க நிதியாதாரம், மதி ஆதாரம் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள் என்றார்.மத்திய அமைச்சர் தாசரி நாராயணராவ் பேசுகையில், 40 ஆண்டுகளுக்கு முன் நான் பிழைப்பு தேடி வந்தபோது எனக்கு சோறும், இடமும்தந்து அரவணைத்தது சென்னை என்றார்.இப்போது தாசரி, தெலுங்கில் முன்னணி சினிமா தயாரிப்பாளர் என்பதும், சென்னையில் அவர் பல கல்வி நிலையங்களை நடத்தி வருவதும்குறிப்பிடத்தக்கது."தமிழ்த்திரை சேனல்: ஒளிபரப்பு துவக்கம்

    By Staff
    |

    தமிழ்த் திரை தொலைக்காட்சி முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.

    தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் இயக்குனர்கள் சங்கம் உள்பட தமிழ் சினிமாத்துறையின் பல்வேறு அமைப்புகள்ஒருங்கிணைந்து தமிழ்த் திரை என்ற தொலைக்காட்சியை உருவாக்கியுள்ளன.

    கடந்த சில வாரங்களாக சோதனைரீதியில் ஒளிபரப்பாகி வந்த இந்த சேனல், வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவைக்கப்பட்டது.

    சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய கட்டட வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் தாசரி நாராயண ராவ்அலைவரிசையை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசுகையில், பாரதிராஜா தொடுவதில்லை, தொட்டால் விடுவதில்லை. அதற்கு இந்த தமிழ்த் திரைத்தொலைக்காட்சி ஒரு உதாரணம்.

    தொடங்குவது எளிது, தொடருவது அரிது. கலை உலகில் எல்லோரும் இரும்புதான், அத்தனை இரும்புகளும் பாரதிராஜா என்ற காந்தமலையில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன என்று பாரதிராஜாவுக்கு புகழாரம் சூட்டினார்.


    குஷ்பு பேசுகையில், நான் மும்பையில் பிறந்து வளர்ந்து, தமிழரை திருமணம் செய்து கொண்டு, 2 குழந்தைகள் பெற்று இப்போதுதமிழகத்தின் மருமகளாகியுள்ளேன். இந்த டிவியால் தமிழ் சினிமாவுக்கு இப்போது புதிய அந்தஸ்து கிடைத்துள்ளது. இந்த அலைவரிசைதமிழ் திரைப்படத் துறைக்கு புதிய கெளரவத்தைத் தேடிக் கொடுத்துள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில், இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, எஸ்.ஏ.சந்திரசேகர், ஷங்கர், பாலு மகேந்திரா,எஸ்.ஜே.சூர்யா, சேரன் உள்ளிட்டோரும், இசையமைப்பாளர் இளையராஜா, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், நடிகர், நடிகையர் உள்ளிட்டோர் கலந்து காண்டனர்.

    பாரதிராஜா நிறைவுரையாற்றுகையில், ஒவ்வொரு தமிழனின் மூச்சிலும் தமிழ்த் திரை குடி கொண்டிருக்கும். திரை அம்சங்கள்மட்டுமல்லாது, அதையும் தாண்டி மனித வள மேம்பாடுகளையும் பிரதிபலிக்கும் வகையிலான நிகழ்ச்சிகளை இந்த அலைவரிசைஒளிபரப்பும்.

    இந்த அலைவரிசை உருவாகி, பிறப்பெடுக்க நிதியாதாரம், மதி ஆதாரம் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள் என்றார்.

    மத்திய அமைச்சர் தாசரி நாராயணராவ் பேசுகையில், 40 ஆண்டுகளுக்கு முன் நான் பிழைப்பு தேடி வந்தபோது எனக்கு சோறும், இடமும்தந்து அரவணைத்தது சென்னை என்றார்.

    இப்போது தாசரி, தெலுங்கில் முன்னணி சினிமா தயாரிப்பாளர் என்பதும், சென்னையில் அவர் பல கல்வி நிலையங்களை நடத்தி வருவதும்குறிப்பிடத்தக்கது.

    "தமிழ்த்திரை சேனல்: ஒளிபரப்பு துவக்கம்

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X