தமிழ் படம் 2.0 பெயர் மாற்றம்: அதற்கான காரணத்தை மட்டும் கேட்டீங்க...
Recommended Video

சென்னை: தமிழ் படம் 2.0 பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் சிவா சாரி அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்து ஹிட்டான தமிழ் படத்தின் 2ம் பாகத்தை தமிழ் படம் 2.0 என்ற பெயரில் எடுத்துள்ளனர்.
போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடப்பதாக அமுதன் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் செய்யும் சேட்டையை எல்லாம் பார்த்தால் அப்படி தெரியவில்லை.
தமிழ் படம்
தமிழ் படம் 2.0 என்ற பெயரை தமிழ் படம் 2 என்று மாற்றியுள்ளனர். பூஜ்ஜியத்திற்கு மதிப்பு இல்லை என்பதால் தலைப்பை மாற்றியதாக தயாரிப்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எந்திரன்
ஷங்கர் ரஜினிகாந்தை வைத்து இயக்கியுள்ள எந்திரன் 2.0 படத்தை கிண்டல் செய்து தமிழ் படம் 2.0 என்று பெயர் வைத்தனர். தற்போது அவர்கள் பூஜ்ஜியத்தை கழற்றிவிட்டதால் ஷங்கர் என்ன செய்வாரோ என்று நெட்டிசன்கள் கேட்டுள்ளனர். சிலர் ஒருபடி மேலே போய் எந்திரன் 2.0 தயாரிப்பு தரப்பில் நெருக்கடி கொடுப்பட்டதா என்று கேட்டுள்ளனர்.
ரிலீஸ்
அமுதா, நீங்க எந்த தலைப்பை வேண்டுமானாலும் வச்சுக்கோங்க, ஆனால் படத்தை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க பாஸு
நிலைமை
தமிழ் படம் 2 பார்த்த தயாரிப்பாளரின் நிலையாம். அமுதன் அடுத்தவர்களை மட்டும் அல்ல தன்னை தானேவும் கலாய்த்துக் கொள்ள தயங்குவது இல்லை.


Click it and Unblock the Notifications











