பைரசி பார்ட்னர்... பரபரப்பைக் கிளப்பிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

By Vignesh Selvaraj

Recommended Video

பைரசி பார்ட்னர்... பரபரப்பைக் கிளப்பிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!- வீடியோ

சென்னை : சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளிவந்து வெற்றியடைந்த படம் 'தமிழ்ப்படம்'.

பிரபலமான ஸ்டார்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரை ஸ்பூஃப் செய்து உருவான இந்தப் படத்தில் முன்னணி நாயகர்களின் படத்தில் வந்த காட்சிகளை செமையாக கலாய்த்திருந்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாகம் தயாராகவிருக்கிறது. 'தமிழ்ப்படம் 2'-வின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.

ரெண்டாவது படம்

ரெண்டாவது படம்

தமிழ்ப்படம் வெற்றிக்குப் பிறகு 'ரெண்டாவது படம்' என்றொரு படத்தை இயக்கினார் சி.எஸ்.அமுதன். ஆனால், அந்தப் படம் ரிலீஸாவது போல தெரியவில்லை. இந்நிலையில், 'தமிழ்ப் படம்' இயக்க இருக்கிறார்.

பைரசி பார்ட்னர்

பைரசி பார்ட்னர்

'தமிழ்ப் படம் 2' ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. இதில் அதிகாரப்பூர்வ பைரசி பார்ட்னர் தமிழ் ராக்கர்ஸ் என்று போட்டுள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் தற்போது ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.

அகில உலக சூப்பர் ஸ்டார்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சித்தார்த், 'இனிமே எல்லாம் ஒரு மாதிரியா தான் நடக்கும். அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிக்கும் 'தமிழ்ப்படம் 2'. எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் சினிமாவில் படங்கள் ரிலீஸ் ஆனதும் தமிழ் ராக்கர்ஸ் என்ற வலைதளத்தில் உடனே படம் வெளியாகிவிடும். இதனால் தயாரிப்பாளர் சங்கமும் அந்த வலைதளத்தை முடக்க நிறைய முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

செம ப்ரொமோஷன்

செம ப்ரொமோஷன்

இந்த நிலையில் மிர்ச்சி சிவா நடிக்கும் தமிழ்ப்படத்தின் இரண்டாம் பாக ஃபஸ்ட் லுக் போஸ்டரில் எங்களுடைய படம் அடுத்த வருடம் மே மாதம் 25-ம் தேதி ரிலீஸ் என்றும் தமிழ் ராக்கர்ஸில் 26-ம் தேதி ரிலீஸ் என்றும் போட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X