தமிழ் படம் 2 அறிமுக பாடல்: தல, தளபதி, ரஜினி, கமல், ஓபிஎஸ், கேப்டனை மரண கலாய்

By Siva

Recommended Video

தமிழ் படம் 2 நான் யாருமில்ல பாடல் விமர்சனம்- வீடியோ

சென்னை: தமிழ் படம் 2 படத்தில் சிவாவின் அறிமுக பாடலை வெளியிட்டுள்ளனர்.

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்துள்ள படம் தமிழ் படம் 2. படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடப்பதாக கூறிக் கொண்டு நடப்பு சம்பவங்களை கலாய்த்து போஸ்டர், புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் நடந்த வெங்காய பிரச்சனையை கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை.

வீடியோ

சிவாவின் அறிமுக பாடலான நான் யாருமில்ல இன்று வெளியிடப்பட்டுள்ளது. பாடல் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியான உடனேயே இந்த வீடியோவில் யார், யாரை எல்லாம் கலாய்த்திருக்கிறார்களோ என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டது.

பினாமி

பினாமி

சுனாமியின் பினாமியே என்று பாடல் துவங்கும்போது ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் என்று கூறி மெர்சல் விஜய் போன்று சைகை காட்டுகிறார் சிவா.

மீத்தேன்

மீத்தேன்

பீட்டா வந்தால் எனக்கென்ன, மீத்தேன் எடுத்தா எனக்கென்ன, நான் வாயே திறக்க மாட்டேன், வாயே திறக்க மாட்டேன் என்று பாடுகிறார் சிவா. புரிந்துவிட்டது அகில உலக சூப்பர் ஸ்டார் அவர்களே.

மாஸ் ஓபனிங்

மாஸ் ஓபனிங்

எனக்கு யு வேணும், மாஸ் ஓபனிங் வேணும், டாக்ஸ் ஃப்ரீ வேணும் எனக்கு அது மட்டும் போதும் என்கிறார் சிவா. நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற என்று சிவாவை பார்த்து பாடுகிறார்கள்.

ரஜினி

ரஜினி

வர்லாம் வர்லாம் வா வர்லாம் வர்லாம் வா என்று பைரவாவை கலாய்த்திருக்கிறார் சிவா. நான் எப்ப வருவேன், எங்க வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது ஏன்னா நான் வரவே மாட்டேன் என்று ரஜினியை வாரியுள்ளார்கள்.

தியானம்

தியானம்

இது தானா சேர்ந்த கூட்டம் இல்லை எல்லாம் ஜூனியர் ஆர்டிஸ்ட் என்று சூர்யாவையும் விட்டுவைக்கவில்லை. அரசியலில் நான் குதிக்க மாட்டேன், பீச்சில் தியானம் பண்ண மாட்டேன். ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது நான் யுஎஸ் கிளம்பி போய்விடுவேன் என்று கமலையும் விட்டுவைக்கவில்லை.

விஷால்

விஷால்

தூக்கி அடிச்சிடுவேன் பாத்துக்கோ என்று கேப்டனையும் கலாய்த்துவிட்டார்கள். என் உயிர் மூச்சு சங்கம்டா, மண்டபம் கட்டிட்டு தான் கல்யாணம்டா என்று விஷாலை கிண்டல் செய்துள்ளனர். புலி இசை வெளியீட்டு விழாவில் விஜய்யை புகழ்ந்து டி.ஆர். பேசியதையும் கலாய்த்துள்ளார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X