தளபதியை அடுத்து தல, சிம்புவையும் கலாய்த்த 'தமிழ் படம் 2' குழு: கொலவெறியில் ரசிகர்கள்
Recommended Video

சென்னை: மாநாடு பட போஸ்டருக்காக காத்திருந்து அந்த வந்த வேகத்தில் கலாய்த்துள்ளது தமிழ் படம் 2 குழு.
தமிழ் படம் 2 குழுவினர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வரை பலரையும் கலாய்த்துள்ளனர். இந்நிலையில் வெங்கட் பிரபு, சிம்பு சேரும் படத்தின் போஸ்டருக்காக காத்திருந்தார்கள்.
அவர்கள் எதிர்பார்த்தபடியே தலைப்பும், போஸ்டரும் நேற்று வெளியிடப்பட்டது.

போஸ்டர்
மாநாடு தலைப்பும், போஸ்டரும் வெளியான உடன் முதல் ஆளாக தமிழ் படம் 2 தயாரிப்பாளர் வாழ்த்தியபோதே இவர்கள் கலாய்க்கப் போகிறார்கள் என்பது தெரிந்தது.
கலாய்
மாநாடு பட போஸ்டரை கலாய்த்து தமிழ் படம் 2 குழு ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. கட்அவுட் வைப்பது பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அதை தவிர்க்கவும் என்ற வாசகத்துடன் போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.
சிவா
அப்பாடா படம் நாளை ரிலீஸாவதால் இனி யாரையும் கலாய்த்து போஸ்டர் விட மாட்டார்கள் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே. பட ரிலீஸ் தேதியை அறிவிக்க தளபதியை கலாய்த்த அவர்கள் மேலும் ஒரு போஸ்டர் வெளியிட்டு தலயையும் கலாய்த்துள்ளனர்.
தளபதி
தல, தளபதி ரசிகர்கள் அமுதன் மீது கொலவெறியில் உள்ளனர்.
முடியல சாமி
போஸ்டர் போஸ்டர் போஸ்டரோ போஸ்டர் போஸ்டருக்கெல்லாம் போஸ்டர் என்று நமக்கு கண்ணை கட்ட வைக்கும் அளவுக்கு போஸ்டர் வெளியிட்டுள்ளது தமிழ் படம் 2 குழு.


Click it and Unblock the Notifications











