கமல், வெங்காய பிரச்சனை, டிக் டிக் டிக்கை மரண கலாய் கலாய்த்த தமிழ் படம் 2
Recommended Video

சென்னை: தமிழ் படம் 2 குழு டிக் டிக் டிக் படத்தையும் விட்டு வைக்கவில்லை.
சி. எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்துள்ள படம் தமிழ் படம் 2. தமிழ் படம் 2.0 என்ற பெயரை அண்மையில் தான் தமிழ் படம் 2 என்று மாற்றினார்கள்.
இந்நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் படத்தையும் கலாய்த்துள்ளனர்.
டிக் டிக் டிக்
போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடக்கிறது என்று சொல்லிக் கொண்டு புதுப் படங்கள் முதல் அனைத்தையும் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது சிக்கியது டிக் டிக் டிக் படம் தான். சிவாவின் அறிமுக பாடல் நாளை வெளியிடப்படுகிறதாம்.
ஹீரோயின்
ஹேர்ஸ்டைல் செய்ய நான்கு மணிநேரமாகியும் பொறுமையாக இருந்த ஐஸ்வர்யா மேனனை பாராட்டுகிறேன் என்று அமுதன் ட்வீட்டியுள்ளார். அண்மையில் ஒரு அம்மணி மேக்கப் போட 4 மணிநேரம் ஆனது என்று கூறியதை தான் கலாய்த்திருக்கிறாரோ?

எதிர்பார்ப்பு
போஸ்டர், டீஸரிலேயே துணை முதல்வர் முதல் பலரையும் கலாய்த்திருந்தார்கள். அறிமுக பாடலில் அகில உலக சூப்பர் ஸ்டார் யார், யாரை எல்லாம் மரண கலாய் கலாய்த்திருக்கிறாரோ என்பதை உடனே தெரிந்து கொள்ளும் ஆவல் எழுந்துள்ளது.
கமல்
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் முதல் நாளில் கமல் அணிந்திருந்த உடையை சதீஷுக்கு போட்டுவிட்டு உலக நாயகனையும் கலாய்த்துவிட்டார்கள். நீங்க நடத்துங்க ராசா.
வெங்காயம்
பிக் பாஸ் வீட்டில் நடந்த கேரட் பொறியல் சண்டையையும் இந்த அமுதன் விட்டுவைக்கவில்லை.


Click it and Unblock the Notifications











