Don't Miss!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- News ரூ.50 சாம்பார் சாதம், புளி சாதம், தயிர் சாதம்.. மகிழ்ச்சியில் விருதுநகர் டூ திண்டுக்கல்.. வேற லெவல்
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
நாளை ரஜினி மட்டும் அல்ல அகில உலக சூப்பர் ஸ்டாரும் வருகிறார்: வயிறு பத்திரம்
சென்னை: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக சூப்பர் ஸ்டார் மட்டும் அல்ல அகில உலக சூப்பர் ஸ்டாரும் வருகிறார்.
விநாயகர் சதுர்த்தி நாளான நாளை ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் டீஸர் அதுவும் 3டியில் வெளியாக உள்ளது. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா படம் நாளை வெளியாக உள்ளது.
இந்நிலையில் தொலைக்காட்சி சேனல்களிலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு படங்கள் ஒளிபரப்புகிறார்கள்.
குலேபகாவலி
ஏதாவது பண்டிகை என்றால் சன் டிவியில் இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்று அறிவித்து ஒரு படத்தை ஒளிபரப்புவார்கள். அந்த வழக்கத்தை கைவிடாமல் நாளை பிரபுதேவா நடித்த குலேபகாவலி மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த மீசைய முறுக்கு ஆகிய படங்கள் ஒளிபரப்பாகின்றன. இது தவிர சாலமன் பாப்பையாவின் சிறப்பு பட்டிமன்றமும் தவறாமல் ஒளிபரப்பப்படும்.
|
தமிழ் படம் 2
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விஜய் டிவியில் அகில உலக சூப்பர் சிவா நடிப்பில் வெளியாகி ஹிட்டான தமிழ் படம் 2 ஒளிபரப்பப்படுகிறது. அதுவும் சன் டிவியில் குலேபகாவலி ஓடும் அதே 11 மணிக்கு. இதை பார்ப்பதா, அதை பார்ப்பதா என்று மக்கள் குழம்ப வேண்டாமா?. இதற்கிடையே மின் வெட்டு இல்லாமல் இருக்க வேண்டும். டிவியில் ஏதாவது புதுப்படம் போட்டாலே மின்வாரிய ஆட்களுக்கு பொறுக்காது. உடனே கரண்ட்டை கட் பண்ணிடுவாங்க.
|
சீமராஜா
நாளை சன் டிவியில் சிவகார்த்திகேயனின் சீமராஜா நிகழ்ச்சி மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் சிவகார்த்திகேயன், சூரி, சிம்ரன் உள்ளிட்ட சீமராஜா படக்குழு கலந்து கொள்கிறது. சூரியின் தீவிர ரசிகை ஒருவர் மேடைக்கு வந்து அவரை கட்டிப்பிடிப்பது போன்று காட்டியுள்ளனர். இப்படி ஒரு ரசிகையா, சொல்லவே இல்லை.
|
சாமி ஸ்கொயர்
விஜய் டிவியில் சாமி ஸ்கொயர் படக்குழு கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நாளை ஒளிபரப்பாகிறது. டிடி நடத்தும் அந்த நிகழ்ச்சியில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஹரி ஆகியோர் கலந்து கொண்டு ஜாலியாக பேசுகிறார்கள்.