அமுதன் ட்வீட்டை பார்த்தால் 'தமிழ் படம் 3' வரப் போகிறது போலயே: இந்த வாட்டி யார், யாரோ?

By Siva

சென்னை: இயக்குனர் அமுதன் போட்டுள்ள ட்வீட்டை பார்த்தால் தமிழ் படம் 3 வரும் என்று தெரிகிறது.

அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்த தமிழ் படம் 2 கடந்த 12ம் தேதி ரிலீஸாகி ஹிட்டாகியுள்ளது. படத்தில் யாரையும் விட்டு வைக்காமல் கண்டமேனிக்கு கலாய்த்திருந்தனர்.

Tamizh Padam 3 on cards?

கடைசியில் சிவாவை கூட நடிக்க வைத்துவிட்டார் அமுதன். படத்தை பார்த்தவர்கள் 3ம் பாகத்தை எடுக்குமாறு அமுதனுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் அமுதன் இன்று ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

மீண்டும் துவங்கியுள்ளது என்று கூறி மேஜையில் இருக்கும் ஸ்கிரிப்படை சீரியஸாக பார்ப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அமுதன்.

அவரின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் சூப்பர் சார், வெயிட்டிங் என்று சந்தோஷமாக கமெண்ட் போட்டுள்ளனர்.

தமிழ் படம் 2 படத்தில் தல, தளபதி படங்களை ஈவு, இரக்கமின்றி கலாய்த்திருந்தார் அமுதன். 3ம் பாகத்தில் யார், யார் எல்லாம் சிக்கப் போகிறார்களோ?

More from Filmibeat

Read more about: cs amudhan twitter
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X