காதலித்து ஏமாற்றிய நடிகர்..மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற ஸ்ரீபிரியா.. பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்!
சென்னை: சினிமாவில் துணிச்சலான நடிகை என பெயர் எடுத்தவர் நடிகை ஸ்ரீபிரியா. இவர் கிட்டத்தட்ட 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்திருக்கிறார். அதுவும், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என இருவருடன் மட்டும் 60 படத்தில் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். அந்த திரைப்படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இந்நிலையில், பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் ஸ்ரீபிரியா குறித்து பேட்டியில் பல விஷயத்தை பேசி உள்ளார்.
70 மற்றும் 80 கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை ஸ்ரீபிரியா. இவரின் உண்மையான பெயர் அலமேலு. இவரின் பெற்றோரின் பெயர் பக்கிரிசாமி, கிரிஜா. நடிகை ஸ்ரீ பிரியாவின் குடும்பம் பெரிய இசைகுடும்பம். சித்தப்பா, பெரியப்பா, மாமா என அனைவருமே பெரிய இசைவித்தர்களாக இருந்தனர். அப்படி இருக்கும்போது தான், ஸ்ரீபிரியாவின் மூத்த அக்கா மீனாட்சி, அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த சிவகுமாரின் அம்மா முதன் முதலில் நடிப்பதற்கான மேக்கப்போட்டு போட்டோ எடுக்கப்பட்டது.

நடிகை ஸ்ரீபிரியா: இப்படி போட்டோ எடுக்கப்பட்ட போது, ஸ்ரீ பிரியாவையும் போட்டோ எடுக்கிறார்கள். அந்த போட்டோவைப் பார்த்த தயாரிப்பாளர்கள் ஸ்ரீ பிரியாவிற்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு தருகிறார்கள். அப்போது தான், மாணிக்க தொட்டில் என்ற படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக நடித்தார். இதையடுத்து,சிவக்குமாருக்கு ஜோடியாக ஆட்டுக்கார அலமேலு படத்தில் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து, தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிப்படத்திலும், பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.
12 படத்தில் ஜோடி: ஆட்டுக்கார அலமேலு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 12 திரைப்படங்களில் ஸ்ரீபிரியாவும் சிவக்குமாரும் இணைந்து நடித்துள்ளார்கள். படப்பிடிப்பில் யாரிடமும் எதுவுமே பேசாமல், எப்போதும் தலைக்கனத்துடன் இருக்கும் ஸ்ரீபிரியா, சிவக்குமாரை சாப்பிட்டீங்களா என்று கூட கேட்டது இல்லை. சிவக்குமாரும் அப்படித்தான் தேவையில்லாமல் எதையுமே பேசமாட்டார்.
காதல் தோல்வி: இப்படி அனைத்து முன்னணி திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த ஸ்ரீபிரியா, நடிகர் கார்த்திக்குடன் நினைவுகள் படத்தில் சேர்ந்து, நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. கார்த்திக் ஸ்ரீபிரியா விட நான்கு வயது சிறியவராக இருந்த போதும், இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்ததால், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கின்றனர். இவர்களின் காதல், திருமணம் வரை சென்ற போது, கார்த்திக் திடீரென ராகினியை திருமணம் செய்து கொண்டார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீபிரியா, கார்த்திக்கின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து அவரை சரமாரியாக அடித்து, அங்கு இருந்த பொருட்களை எல்லாம் தூக்கிப் போட்டு உடைத்து விட்டு, தற்கொலைக்கு முயன்றார். அதன் பின், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவரை காப்பாற்றினார்கள். இதையடுத்து, இந்த விஷயத்தில் பல முன்னணி நடிகர்கள் தலையிட்டு ஸ்ரீபிரியாவை சமாதானப்படுத்தினர்.
துணிச்சலான நடிகை: 1987ம் ஆண்டு நடிகை லதாவின் தம்பியும், மலையாள நடிகருமான ராஜ்குமார் சேதுபதியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒருமகளும் இருக்கிறார். இதைத்தொடர்ந்து ஸ்ரீபிரியா, குடும்ப வாழ்க்கை, சின்னத்திரை, அரசியல் என அனைத்திலும் முத்திரைப்பதித்துள்ளார். தமிழ் சினிமாவில் துணிச்சலான நடிகை என்றால் அது ஸ்ரீபிரியா தான் என பாண்டியன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











