நெப்போலியனை விரட்டிய அமெரிக்கா.. ஜப்பானில் திருமணத்தை நடத்த காரணமே இதுதான்.. பிரபலம் சொன்ன தகவல்!
சென்னை: நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் அடுத்த மாதம் ஜப்பானில் நடைபெற உள்ள நிலையில், திருமண வேலைகளை நெப்போலியன் குடும்பமாக சேர்ந்து பார்த்து வருகிறார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய தமிழா தமிழா பாண்டியன், நெப்போலியன் மகனுக்கு ஜப்பானில் திருமணம் நடத்துவதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
நெப்போலியனின் மூத்த மகன் தனுஷூக்கு, நெப்போலியனின் உறவுக்கார பெண்ணான அக்ஷயாவிற்கு பார்த்து முடிவு செய்யப்பட்டு, ஜூன் மாதம் தடபுடலாக நிச்சயம் நடந்தது. இந்த திருமணம் நவம்பர் 7ந் தேதி ஜப்பானில் வைத்திருக்கிறார். இந்த திருமணத்திற்கு இன்னும் ஒன்றரை மாதம் இருக்கும் நிலையில், நெப்போலியன் குடும்பத்துடன் 15 நாட்கள் பயணம் செய்து ஜப்பானில் திருமண வேலைகளை கவனித்து வருகிறார்.

தமிழா தமிழா பாண்டியன்: இந்நிலையில், தமிழா தமிழா பாண்டியன் Realone Media யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், நெப்போலியன் மகன் தசை திசைவு நோயால் பாதிக்கப்பட்டார். அப்போது மத்திய அமைச்சராக இருந்த நெப்போலியன் மகனின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு 500 ஏக்கர் பண்ணை வீட்டை வாங்கி அங்கேயே செட்டிலாகிவிட்டார். தற்போது நெப்போலியனுக்கும் அவரது மனைவிக்கும் வயதாகி விட்டது. இந்த நேரத்தில் மகனின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய சூழ்நிலை வந்ததால், தனது மகனுக்கு உறவுக்கார பெண்ணான அக்ஷயாவை நிச்சயம் செய்துள்ளனர்.
மருமகளுக்கு சொத்து: தனுஷால் நடக்க முடியாது என்பதால், அவரை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த திருமணமே நடக்கிறது. பல கோடி சொத்து இருக்கிறது, இந்த சொத்துக்காக யாரும் தவறான முடிவை எடுத்துவிடக்கூடாது என்பதற்காக நெப்போலியன் இந்த திருமணத்தை செய்கிறார். மேலும், இந்த திருமணத்தை சட்டப்பூர்வமாக்கி விட்டால், நெப்போலியன் சொத்து அந்த பெண்ணுக்கு வந்துவிடும்.
ஜப்பானில் திருமணம்: ஆனால், குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத, யாருடைய திருமணத்தையும் அமெரிக்கா அனுமதிக்காது. இந்த திருமணத்தையும் அமெரிக்கா அனுமதிக்காததால், நெப்போலியன் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் திருமணம் நடந்தால், அது அமெரிக்காவில் செல்லுபடி ஆகாது என்பதால் தான் ஜப்பானில் திருமணத்தை வைத்துள்ளார். ஜப்பான் நாட்டு சட்டப்படி இந்த திருமணம் ஏற்றுக்கொள்ளக்கூடிய திருமணம். இந்த திருமணத்தை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் என்பதற்காகத்தான் ஜப்பானில் திருமணத்தை வைத்துள்ளார்.
இதுதான் காரணம்: தனுஷின் எதிர்காலம் மற்றும் சொத்தை பாதுகாக்க ஒரு துணை தேவை என்பதற்குத்தான் இந்த திருமணம். பெண் படித்த பட்டதாரி இதனால் அக்ஷயாவின் பெற்றோர்களும் இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டனர். அனைவரின் முழு சம்மதத்தோடு ஜப்பானில் இந்த திருமணம் நடக்க உள்ளது. தனுஷ் அமெரிக்கா குடியுரிமை பெற்றவர் என்பதால், அவரை திருமணம் செய்து கொள்வதன் மூலம் அக்ஷயாவும் அமெரிக்க குடியுரிமை பெற்றவராகிறார் என்று தமிழா தமிழா பாண்டியன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











