கடவுளே அஜித்தே.. முற்றுப்புள்ளி வைத்த அஜித்.. தமிழா தமிழா பாண்டியன் சொல்வது என்ன!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்திற்கு என்று மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அஜித்தை பொதுவெளியில் கடவுளே அஜித்தே என்று கொண்டாடினர். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அஜித், சமீபகாலமாக, பொதுவெளியில் அநாகரீகமாக் தேவையில்லாமல் எழுப்பப்படும் 'க... அஜித்தே' என்ற கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. இந்த செயலை நிறுத்துங்கள்" என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதுகுறித்து பேசிய தமிழா தமிழா பாண்டின், அஜித்தின் ரசிகர்கள் அவரை எப்படியாவது வெளியில் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள், ஆனால் அஜித் அவர்களோ ரசிகர் மன்றத்தையே கலைத்து விட்டார். நான் சினிமாவில் நடிக்கிறேன், என் படத்தை பாருங்கள், பார்த்துவிட்டு வீட்டுக்கு செல்லுங்கள் என்பது அஜித்தின் எண்ணம். என்னை ஒரு திரைப்பட நடிகராக மட்டுமே பாருங்கள் அதை தாண்டி, அரசியலுக்குள் என்னை நுழைக்காதீர்கள் என்பதில் அஜித் அவர்கள் தெளிவாக இருக்கிறார்.

தைரியமாக பேசினார்: கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அரசு விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் அஜித், இந்த நிகழ்ச்சிக்கு என்னை வலுக்கட்டாயமாக வற்புறுத்தி தான் அழைத்தார்கள் என்று மேடையிலேயே தைரியமாக சொல்லிவிட்டார். இதை கேட்ட ரஜினிகாந்த் அவர்கள் எழுந்து நின்று கைதட்டினார். இது அப்போது, மிகப்பெரிய பேசு பொருளாகி சர்ச்சையாக மாறியது. ரஜினி கூட அமைதியாகத்தான் இருந்தார். ஆனால், அஜித் அவர்கள் முதலமைச்சர் இருக்கும் போதே, துணிந்து மேடையில் பேசினார். அஜித் அவர்கள் எந்த ஒரு அரசியல் கட்சியிடமும், எந்தவிதமான சலுகையையும் எதிர்பார்த்தது இல்லை என்பதால் தைரியமாக இதுபோன்ற கருத்தை முன் வைக்கிறார்.
விரும்பவில்லை: நடிகர்களை வைத்து அரசியல் செய்கிறார்கள், வியாபாரம் செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள் அதில் போலித்தனம் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டதால் தான் அஜித் அவர்கள் அரசியலில் இருந்தும், பொது நிகழ்ச்சிகளில் இருந்தும் விலகியே இருக்கிறார். இதேபோல தான், எம்.ஆர்.ராதா அவர்களும் ஒரு மேடையில் நான் ஒரு நடிகன், நடிப்பதற்காக பணம் வாங்கிக் கொண்டு தான் நடிக்கிறேன், எங்களை மக்கள் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை, படத்தை பார்த்துவிட்டு போங்கள் என்று மலேசியாவில் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருந்தார். எம்.ஆர்.ராதா போலத்தான் அஜித் அவர்களின் செயல்பாடும் இருக்கிறது என்று தமிழா தமிழா பாண்டியன் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











