நயன்,விக்கி பின் இருக்கும் அரசியல் பிரமுகர்..தனுஷூக்கு பல கோடி நஷ்டம்.. பாண்டியன் சொன்ன ஷாக் நியூஸ்!

சென்னை: நடிகை நயன்தாராவின் 'பியாண்ட் தி ஃபேரிடேல்' என்ற ஆவணப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி பெரும் புயலை கிளப்பியது. இந்த ஆவணப்படத்தில், தான் நடித்த படங்களின் காட்சியைப் பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் அளித்த தயாரிப்பாளர்களுக்கு நயன்தாரா நன்றி தெரிவித்து இருந்தார். இதில் தனுஷ் பெயர் இடம்பெறவில்லை, ஆனால் உதயநிதியின் பெயர் இடம் பெற்று இருந்தது.

இதுகுறித்து, BBTCinema என்கிற யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த தமிழா தமிழா பாண்டியன் பல விஷயம் குறித்து பேசி உள்ளார். அதில், விக்னேஷ் சிவன் எல்ஐசி என்ற படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தின் டைட்டிலை ஏற்கனவே ஒருவர் தயாரிப்பாளர் சங்கத்திடம் பதிவு செய்திருந்தார். அவரிடம் விக்னேஷ் சிவன் டைட்டிலை கேட்ட போது அவர் மறுத்துவிட்டார். ஆனால், இந்த டைட்டிலை விக்னேஷ் சிவன், அபகரித்துக் கொண்டார். இதற்கு தயாரிப்பாளர் சங்கத்திடம் சில கருங்காலிகள் துணையாக இருந்தனர். இந்த தைரியம் விக்னேஷ்சிவனுக்கு வந்தது எப்படி? இந்த தைரியத்தை கொடுத்தது நயன்தாராவா.

nayanthara vignesh shivan dhanush

16 கோடி நஷ்டம்: நானும் ரவுடிதான் படத்தில் தனுஷுக்கு 16 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த 16 கோடி ரூபாய் நஷ்டத்தில் 10 கோடியை விக்னேஷ் சிவன் போலி கணக்கு எழுதிய திருடியதாக தனுஷ் கூறி இருக்கிறார். விக்னேஷ் சிவன் போடா போடி என்ற படத்தை இயக்கினார் அந்த படம் வெற்றி பெறவில்லை. இதையடுத்து, தனுஷ் நயன்தாராவின் கால் சீட்டை வாங்கி கொடுத்து விக்னேஷ் சிவனை, நானும் ரவுடிதான் படத்தின் இயக்குனராகினார் தனுஷ். அந்த படத்தின் போது தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

மோதலுக்கு காரணம்: நானும் ரவுடிதான் படத்தில் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதால், நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் அந்த மூன்று நிமிட காட்சியை பயன்படுத்தியதற்காக தனுஷ் 10 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார். இந்த ஆவண படத்திற்கு பல கோடி ரூபாய் பணம் வாங்கும் நயன்தாரா இந்த பணத்தை தர முடியாதா? இதுகுறித்து மூன்று பேருக்கும் நடந்த பேச்சுவார்த்தை தான், இவர்களின் மோதலுக்கு காரணமாகவிட்டதுது. இந்த பிரச்சனை அனைத்திற்கும் முக்கிய காரணம் விக்னேஷ் சிவன் தான். ரஜினி வைத்து லதா ரஜினிகாந்த் எப்படி பணம் சம்பாதிக்கிறாரோ, அதேபோல விக்னேஷ்சிவன் நயன்தாராவை வைத்து பணத்தை சம்பாதிக்கிறார்.

அரசியல் பின்னணி: விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியா மூலம் விளம்பரம் வாங்கிய உதயநிதி ஸ்டாலின் பின்னணியில் இருக்கும் தைரியத்தில் தான் இப்படி பேசி வருகிறார். துணை முதலமைச்சர் ஆக இருக்கும் உதயாநிதி ஸ்டாலின் இருக்கு இந்த சினிமா விவகாரத்தில் பஞ்சாயத்தில் செய்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது. விக்னேஷ் சிவனின் மிகப்பெரிய தைரியமே உதயாநிதி ஸ்டாலின் தான் என்று சினிமா வட்டாரமே சொல்லுகிறது. நயனுக்கு எப்படி லையன் பலம் வந்தது அதற்கு காரணமும் உதயநிதி ஸ்டாலின் தான். நயன், விக்னேஷ் சிவனைப்பார்த்து பலர் பயப்படுவதற்கு காரணம் அரசியல் பின்னணி தான்.

சொத்து தான் இலக்கு: இந்த அரசியல் பின்னணியை வைத்துக்கொண்டு தான் விக்னேஷ் சிவன் அனைத்து நிறுவனங்களிலும் பணத்தை சம்பாதித்து வருகிறார். இதனால் தான் மற்றவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நயன்தாராவிற்கு பல ஆயிரம் கோடி சொத்து இருக்கிறது. படத்திற்கு 50 கோடி என்று வைத்துக்கொண்டாலும் தற்போது அவரிடம் ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கும். இந்த ஆயிரம் கோடி ரூபாய் தான் விக்னேஷ் சிவனின் இலக்கே தவிர, நயன்தாரா இலக்கு அல்ல. இதுதான் தனுஷ், சிம்பு, பிரபுதேவா என அனைவரும் விக்னேஷ் சிவன் மீது சொல்லும் குற்றச்சாட்டு என்று அந்த பேட்டியில் தமிழா தமிழா பாண்டியன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X