நித்யானந்தாவிடம் இருந்து ரஞ்சிதாவை மீட்க போராடிய தந்தை.. தமிழா தமிழா பாண்டியன் சொன்ன ஷாக் தகவல்!

சென்னை: 90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ரஞ்சிதா, சத்யராஜ், அர்ஜுன், விஜய்காந்த், முரளி, கார்த்திக் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். நித்தியானந்தாவின் தீவிர பக்தையான ரஞ்சிதா தற்போது கைலாசாவில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் குறித்து பேசி உள்ள தமிழா தமிழா பாண்டியன் பல விஷயத்தை கூறியுள்ளார்.

அதில், நடிகை ரஞ்சிதா ஆந்திராவில் பிறந்தவர், இவரது தந்தை ஒரு காவல்துறை அதிகாரி, இவருக்கு சினிமா மீது ஆர்வம் இருந்ததால், அந்த வேலையை விட்டுவிட்டு சென்னையில் வந்து பல கம்பெனிகளை ஏறி இறங்கினார். ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால், தனது மூன்று மகள்களில் ஒருவரை நடிகையாக்க முடிவு செய்கிறார். அதில் முதல் மகள் நிர்மலாவிற்கு சினிமாவில் விருப்பம் இல்லை, அதே போல கடைசி மகள் ஜோதிக்கும் விருப்பம் இல்லாததால் நடிக்க மறுத்துவிட்டார்கள். ஆனால், ஸ்ரீவள்ளியான ரஞ்சிதாவிற்கு நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால், தனது மகளை நடிகையாக்க முயற்சி செய்து கடப்பா ரெட்டியம்மா என்ற படத்தில் நடிக்க வைத்தார்.

ranjitha nithyananda kailasa pandian

அடுத்தடுத்த படத்தில்: அதன் பிறகு ரஞ்சிதாவின் தந்தை பாரதிராஜாவிடம் வந்து தனது மகளை நடிகையாக ஆக்கும்படி கேட்டுக்கொண்டதை அடுத்து, பாரதிராஜா ரஞ்சிதா என்ற பெயரை வைக்கிறார். ரஞ்சிதாவின் முதல் படம் நாடோடி தென்றல், அந்த திரைப்படத்தில் வாத்து மேய்க்கும் பெண்ணாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ரஞ்சிதாவின் புகழ் பட்டி தொட்டி எங்கும் பரவியது. இதையடுத்து அர்ஜுனுடன் ஜெய்ஹிந்த், சத்தியராஜூடன் அமைதிப்படை, என் ஆசை மச்சான், கருப்பு நிலா, கர்ணா, மக்களாட்சி, சின்ன வாத்தியார் என அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவே வலம் வந்தார் ரஞ்சிதா.

கிசுகிசுவில் சிக்கினார்: பத்தாண்டு காலம் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த ரஞ்சிதாவிற்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு குறைந்த நிலையில், ராணுவ மேஜரான ராகேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். ஆனால் திருமணம் ஆன ஆறே மாதத்திற்குள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். கணவரை பிரிந்த பிறகு சின்னத்திரையில் ஒரு சில சீரியல்களில் நடித்து வந்தார் ரஞ்சிதா. அதன்பிறகு, ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்பட நித்தியானந்தாவின் அறிமுகம் கிடைத்ததைத் தொடர்ந்து அவருடன் பல ஆண்டுகள் பயணித்தார் ரஞ்சிதா. சினிமாவில் எந்தவிதமான கிசு கிசுவிலும் சிக்காமல் தனிமை விரும்பியாக இருந்த ரஞ்சிதா ஆன்மீகப் பயணத்திற்கு சென்ற பிறகுதான் நித்யானந்தா உடன் கிசுகிசுவில் சிக்கினார்.

மகளுக்காக போராடிய தந்தை: ரஞ்சிதா மட்டுமல்லாமல் அவரின் சகோதரி நிர்மலா மற்றும் ஜோதி என மூன்று பேருமே நித்யானந்தாவின் ஆசிரமத்திலேயே ஐக்கியம் ஆகிவிட்டார்கள். இதனால், ரஞ்சிதாவின் அப்பா அசோக், தனது மகள்களை மீட்டுத்தரக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், நிர்மலாவும், ரஞ்சிதாவும் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து வர மறுத்துவிட்டனர். ஜோதி மட்டும் தந்தையுடன் வந்துவிட்டார்.

பெண் சிஷ்யை செய்த வேலை: அதுவரை, நித்தியானத்தா ஆசிரமத்தில் தலைமை சிஷ்யையாக இருந்த ஒரு பெண், விரட்டப்பட்டு அந்த இடத்தில், ரஞ்சிதா வந்துவிட்டதால், அந்த ஆத்திரத்தில், லெனின் கருப்பன் என்பவரை வைத்து வீடியோவை ரெக்கார்ட் செய்து அனைத்து மீடியாக்களுக்கும் அனுப்பி ரஞ்சிதா மற்றும் நித்தியானந்தாவின் லீலைகளை அம்பலப்படுத்தி விட்டார். இப்போது ரஞ்சிதா, கைலாசாவின் பிரதமராக இருக்கிறார். கைலாசாவின் அனைத்து கட்டுப்பாடுகளும் ரஞ்சிதாவின் கையில் தான் இருக்கிறது என்று தமிழா தமிழா பாண்டியன் அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X