மாடியிலிருந்து குதித்த கார்த்திக்.. பானுப்பிரியாவிற்காக அவர் செய்த வேலை.. பிரபலம் ஷாக் தகவல்!

ஆந்திராவில் பிறந்த பானுப்பிரியா, தன்னுடைய 17வது வயதிலேயே சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். பல மொழிகளில் சுமார் 111-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் 55 படமும், தமிழில் 40க்கும் மேற்பட்ட படத்திலும், இந்தியில் 14 படத்திலும் நடித்துள்ளார்.இவர் பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதால், பெரும்பாலான படத்தில் இவருக்கு நடனமாடும் கதாபாத்திரத்திலேயே நடித்தார்.

நடிகை பானுப்பிரியா: பொதுவாக சில நடிகர் , நடிகைளின் காமினேஷன் இயல்பாகவே மனதிற்கு பிடித்துவிடும் அப்படித்தான் நடிகர் கார்த்திக், பானுப்பிரியாவின் காமினேஷன் பக்காவாக இருக்கும். இவர்கள் இருவரும் சேர்ந்து பாடும் பறவை, கோபுர வாசலிலே, சக்கரவர்த்தி, அமரன் என பல படத்தில் நடித்துள்ளனர். பொதுவாக கார்த்திக் எந்த நாயகியாக இருந்தாலும், அவர்களுக்கு ரூட்டு போட்டுவிடுவார் அப்படித்தான் பானுப்பிரியாவிற்கும் ரூட் போட்டார் என்று பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.

karthik banupriya tamizha tamizha pandian

மாடியிலிருந்து குதித்தார்: இதுகுறித்து அவர், Behind cinema you tube சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், சக்கரவர்த்தி படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, பானுப்பிரியா கார்த்திக்கின் கெஸ்ட்ஹவுசுக்கு சென்றால், இருவரும் படப்பிடிப்புக்கு ஒத்துழைக்காததால், கடைசியில் கெஸ்ட்ஹவுசே ஷூட்டிங் ஸ்பார்ட்டாக மாற்றப்பட்டு படம் எடுக்கப்பட்டு வந்தது. இதுமட்டுமில்லாமல்,பானுப்பிரியாவையும் ஏமாற்றி தயாரிப்பாளரையும் ஏமாற்றி, பெரிய கட்டுடன் வீட்டில் படுத்து இருக்கிறார் நடிகர் கார்த்திக்.

ஏமாற்றிய கார்த்திக்: காலில் இருந்த கட்டைப்பார்த்து பயந்து போன, பானுப்பிரியா என்ன ஆச்சு என்று கேட்க, அவர் வீட்டில் வழுக்கி விழுந்ததாக சொல்லி இருக்கிறார். வழுக்கி விழுந்தா இவ்வளவு பெரிய காயம் வராதே,மாடியில் இருந்து குதித்தீர்களா என்று கேட்க இல்லை என்று சொல்ல, சந்தேகம் அடைந்த பானுப்பிரியா கட்டைப்பிரிந்து பார்த்தால், காயமே இல்லை அது பானுப்பிரியாவை ஏமாற்ற பார்த்த வேலை. அதோடு மட்டுமில்லாமல், இந்த படம் எப்போது வரும் என்று தெரிய, பல நாட்களாக படப்பிடிப்பு நடந்து கொண்டே இருக்கு, இதனால், நீ தயாரிப்பாளரிடம் மொத்த பணத்தையும் வாங்கிவிடு என்று பானுப்பிரியாவை ஏற்றிவிட்டுள்ளார் கார்த்திக்.

கடுப்பான தயாரிப்பாளர்: இதை உண்மை என நம்பிய பானுப்பிரியா, திடீரென்று ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வராமல் வீட்டில் இருந்து கொண்டு பேசிய மொத்த சம்பளத்தையும் கொடுத்தால்தான் நடிக்க வருவேன் என்று சொல்லி பிரச்சனை செய்ய, அது வழக்கம் இல்லையே...முதல் ஷெட்யூல் முடிந்த பின் உங்களுக்கான சம்பளத்தில் ஒரு பகுதியை கொடுத்து விட்டேன். டப்பிங் முடிந்த பின்னர் முழுமையாக பணத்தை கொடுத்து விடுவேன் என்று கூறினார். ஆனால், அதற்கு பானுப்பிரியா நீங்கள் எனக்கு முழு சம்பளத்தை கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

ஆகையால் எனக்கு முழு சம்பளத்தை கொடுங்கள் என்று முடிவாக சொல்லிவிட, 5 லட்சத்திற்கான டிடி ஒன்றை எடுத்துக் கொண்டு தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி கொடுத்தார். கார்த்திக்கின் பேச்சை கேட்டுக்கொண்டு இப்படி பானுப்பிரியா செய்ததால், மற்ற தயாரிப்பாளர்கள் அவரை புக் செய்ய யோசித்தார்கள் என்று அந்த பேட்டியில் தமிழா தமிழா பாண்டியன் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X