காலா படத்தால் வந்த நஷ்டம்.. குடும்பத்தை பிரித்த லதா.. கொளுத்திப்போட்ட தமிழா தமிழா பாண்டியன்!
சென்னை: ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, தனுசை 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், இருவரும் 2022ஆம் ஆண்டு பிரிந்து வாழ முடிவு செய்து பிரிந்தனர். இவர்களின் விவாகரத்து வழக்கு, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன் இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து பேசி உள்ள தமிழா தமிழா பாண்டியன் பல அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார்.
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் ஓர் ஆண்டுக்கு முன்பாகவே வழக்கு தாக்கல் செய்து விட்டனர். இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் நீதிமன்றம் எடுத்தது. ஆனால் கடைசி வரை இருவரும் சேர்ந்து வாழ விரும்பாததால் நீதிமன்றம் இவர்களுக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

விவாகரத்து: குடும்ப நல நீதிமன்றத்தை தாண்டி ரஜினிகாந்த் வீட்டிலேயே ஒரு சுப்ரீம் கோட் இருக்கிறது. அந்த சுப்ரீம் கோட் யார் என்றால் லதா ரஜினிகாந்த் தான். அவர் ஒய்.ஜி.மகேந்திரன் குடும்பத்தை சேர்ந்தவர், மிகுந்த படிப்பாளி குடும்பம், அறிவாளி குடும்பம், இப்படி டெல்லி வரை தொடர்பு உள்ள ஒரு குடும்பத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த விவகாரத்தை உறுதி செய்துவிட்டது. எப்போது என்றால், காலா படத்தின் தோல்வியின் போதே முடிவாகி விட்டது.
காலா படத்தில் நஷ்டம்: இயக்குநர் பா ரஞ்சித், ரஜினிகாந்தை வைத்து காலா படத்தை இயக்குகிறார். அந்த படத்தில் ரஜினிக்கு சம்பளம் 200 கோடி ரூபாய். அந்த பாடத்தை தனுஷ் தயாரிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான அந்த படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது. இதனால், லதா அவர்கள், அப்பாடத்தின் தயாரிப்பாளரான தனுஷிடம் தனது தனது கணவருக்கு வரவேண்டிய சம்பளத்தை கேட்டுள்ளார். மேலும், அந்த படத்தால், தனுஷுக்கு 80 கோடி ரூபாய் நஷ்டம். ரஜினிக்கு வர வேண்டிய 200 கோடி வரவில்லை, தனுஷூக்கு 80 கோடி நஷ்டம். மொத்தம் அந்த குடும்பத்திற்கு மட்டும் 280 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கடனாளியான தனுஷ்: இதுமட்டுமில்லாமல் ஜகமே தந்திரம், மாறன், நானே வருவேன், கேப்டன் மில்லர், வாத்தி, ராயன், விஐபி 2, இதையடுத்துத்தான் நானும் ரௌடி தான் படத்தை எடுத்தார். நாலரை கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான அந்த படம், நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதலால் 16 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் அதிகமாகி விட்டது. அப்படி அடுத்த தோல்வியால் தனுஷ் கடன்காரனாகி விட்டார். இதுமட்டுமில்லாமல், தேனாண்டாள் பிலிம்ஸ், சத்யஜோதி பிலிம்ஸ், பைவ் ஸ்டார் கதிரவன் போன்றவர்களிடம் கடனை வாங்கி போயஸ் கார்டனில் வீட்டை கட்டிவிட்டார். இப்போது, தனுஷ் பணம் தரவில்லை என்றால், அத்தனை பேரும் ரஜினி வீட்டுக்கு சென்றுவிடுவார்கள். தற்போது தனுஷுக்கு 300 கோடிக்கு மேல் கடன் இருக்கிறது, இந்த கடன் தனது பேரன்களின் வாழ்க்கையை பாதிக்கக்கூடாது, தங்கள் தலையில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக லதா ரஜினிகாந்த் எடுத்த முடிவு தான். இந்த விவாகரத்து என்று தமிழா தமிழா பாண்டியன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











