நெப்போலியன் பாதுகாப்பில் இர்ஃபான்.. தொப்புள் கொடி சர்ச்சை என்னாச்சு.. கேள்வி எழுப்பிய பிரபலம்!

சென்னை: யூடியூப் பிரபலமான இர்ஃபான், தனது சேனலில் மனைவியின் பிரசவ அறை வீடியோவில் தொப்புள் கொடியை கத்தரிக்கோலால் வெட்டுவது இடம் பெற்று பெரும் சர்ச்சையானது.அதற்கு இர்பாஃன் வருத்தம் தெரிவித்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் என்று கூறியிருந்தார். ஆனால், தொப்புள் கொடி சர்ச்சையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பிரபலம் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

யூடியூபரான இர்ஃபான் தஞ்சாவூரைச் சேர்ந்த ஆசிபா என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து, தனக்கு பிறக்க உள்ள குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை டெஸ்ட் எடுத்து தெரிந்துகொண்டு அதை விழாவாக அறிவித்தார். இந்தியாவில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவிப்பது சட்டப்படி குற்றம் என்பதால் துபாய்க்கு சென்று இந்த வேலையை செய்திருந்தார் இர்ஃபான். அவரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அதற்கு மன்னிப்பு கேட்டு அந்த வீடியோவை டெலிட் செய்து சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பினார் இர்ஃபான்.

youtuber irfan nepolean japan

பிரசவ அறை வீடியோ: இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் இர்பாஃனுக்கு பெண் குழந்தை பிறந்தது, குழந்தை பிறந்து மூன்று மாதம் ஆனநிலையில், தனது சேனலில் மனைவியின் பிரசவ வீடியோவை தொகுப்பாக வெளியிட்டு இருந்தார். அதில், குழந்தையின் தொப்புள் கொடியை கத்தரிக்கோலால் வெட்டியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் பெரும் புயலை கிளப்பியது, பயிற்சி பெற்ற மருத்துவர்கள்தான் இந்த அறுவை சிகிச்சையை செய்ய வேண்டும் என்றும், தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டியது தனிநபர் உரிமையை மீறும் செயல் என்று மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

வருத்தம் தெரிவித்து கடிதம்: இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு 10 நாட்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டு ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், பிரசவம் பார்த்த மருத்துவர் மற்றும் இர்ஃபான் மீது செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இர்ஃபான், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம் குறித்து வருத்தம் தெரிவித்து மருத்துவத் துறைக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.அதில், எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என்றும் மருத்துவ சட்டத்தை மதிப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அவர் வருத்தம் தெரிவித்த போதும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் என்று கூறியிருந்தார்.

youtuber irfan nepolean japan

நெப்போலியனின் பாதுகாப்பில் இர்ஃபான்: இந்நிலையில் இந்த விஷயம் குறித்து King 24/7 யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய தமிழா தமிழா பாண்டியன், இர்ஃபானை தமிழ்நாட்டில் போலீஸ் தேடி கொண்டு இருக்கிறது. வருத்தம் தெரிவித்துவிட்டு ஒரு கடிதம் அனுப்பிவிட்டு ஜப்பானில் நெப்போலியன் மகன் கல்யாணத்தில் விருந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார். ஏன் என்றால் இர்ஃபான் திமுகாவின் ஐடிவிங்கில் ஒரு முக்கியமான ஆளு என்பதால், தொப்புள் கொடியை ரிப்பன் வெட்டுவது போலவும் வெட்டுவாரு, வயிற்றை கிழித்து ஆப்ரேசனும் செய்வார் அவரை இந்த திமுக அரசாங்கம் ஒன்னும் செய்யாது ஏன் என்றால், திமுக ஐடிவிங்கில் இருந்தா எந்த குற்றத்தை வேண்டுமானாலும் செய்து கொண்டு தப்பித்துக்கொள்ளலாம் என்று தமிழா தமிழா பாண்டியன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X