சிவக்குமார் வீட்டில் சாப்பிடுவது இல்லை..ஜோதிகா குடும்பத்தில் நடப்பது இதுதான்..பிரபலம் சொல்வது என்ன?

சென்னை: தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர் சூர்யா, ஜோதிகா, இவர்கள் இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலிருந்து காதலிக்க துவங்கி அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்பம் குழந்தை என செட்டி லாக்கி விட்டார்கள். ஜோதிகா மீண்டும் நடிக்க வந்ததில் இருந்து தொடர்ந்து அவர் குறித்து சர்ச்சைகள் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அவர் பிலிம்பேர் விழாவிற்கு கவர்ச்சி ஆடையில் வந்தது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதுகுறித்து தமிழா தமிழா பாண்டியன் யூடியூப்சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அடுத்தடுத்த படத்தில்: காதலித்து திருமணம் செய்து கொண்ட, சூர்யா ஜோதிகா தம்பதிகளுக்கு தேவ் தியா என ஒரு மகள் ஒரு மகன் இருக்கிறார்கள். சமீப காலமாக ஜோதிகா குடும்பத்தோடு மும்பையில் சென்று செட்டிலாகி அங்கே ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் மாதவனுடன் அணைந்து சைத்தான் என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் என அடுத்தடுத்து படத்தில் நடித்து வருகிறார்.

jyothika suriya sivakumar

வரம்பு மீறிய கவர்ச்சி: அண்மையில் ஜோதிகா, பிலிம்பேர் விருது விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் கருப்பு நிற பிளேசர் போட்டுக்கொண்டு உள்ளே இருக்கும் உள்ளாடை அப்பட்டமாக காட்டி புகைப்படத்திற்கு போஸ்ட் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் பார்த்து மோசமாக விமர்சங்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில் தமிழா தமிழா பாண்டியன் இதுகுறித்து பேசி உள்ளார்.

காதல் திருமணம்: அதில், சிவக்குமாருக்கு சினிமா பற்றி நன்றாக தெரியும் என்பதால், அவர் சூர்யா ஜோதிகாவை காதலிக்கிறார் என்று சொன்னதும் அதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. சூர்யா அடம்பிடித்து திருமணம் செய்து கொண்டார். வேறு வழியே இல்லாமல் சிவக்குமார் திருமணம் செய்து வைத்தார். இதே தவறை இரண்டாவது மகன் செய்துவிடப்போகிறான் என்ற பயத்தில் கார்த்திக்கு சொந்தத்தில் ஒரு பெண்ணைப்பார்த்து திருமணம் செய்துவைத்துவிட்டார்.

மும்பையில் செட்டில்: கோடி கோடியாக சம்பளம் வாங்கும் ஒரு நடிகை, தனது குடும்பத்திற்கான இத்தனை ஆண்டுகள் சேர்ந்து இருந்ததே பெரிய விஷயம் தான். அது சிவக்குமாருக்கும் பெருமை, ஜோதிகாவுக்கும் பெருமை, சூர்யாவிற்கும் பெருமை. ஆனால், இப்போது குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள் அதனால், இனிமேல் மாமனாரின் கட்டுப்பாட்டில் இருக்க விரும்பாமல், குழந்தைகளின் படிப்பை காரணம் காட்டி, குடும்பத்தோடு மும்பையில் செட்டிலாகி விட்டார்.

சிவக்குமார் ஒதுங்கிவிட்டார்: ஜோதிகா நடிக்கப்போகிறார் என்று சொன்னதும் பிரச்சனை வந்து சிவக்குமார், வீட்டில் சாப்பிடாமல் வெளியில் சாப்பிட்டதாக எனக்கு தகவல் வந்தது. அப்படி என்றால் பிரச்சனை இருக்கு என்று தானே அர்த்தம். இப்போது ஜோதிகா, மும்பை வாழ்க்கைக்கு அடிமையாகி விட்டார். அது தான் அவரின் உடையில் தெரிகிறது. நீண்ட நாட்களாக மனதில் தேக்கிவைத்து இருந்த மும்பை வாழ்க்கையை அவர் வாழ்கிறார் என்று அந்த பேட்டியில் தமிழா தமிழா பாண்டியன் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X