ரஜினி என்ன ஏடிஎம் மிஷினா? ஜெயிலர் வெற்றி பெற அவர் செய்த வேலை.. பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்றும், தீபாவளி பண்டிகையின் போது இருவரும் சந்தித்து பேசிவிட்டார்கள். இதனால், இவர்கள் பிரிய வாய்ப்பு இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில், இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இது குறித்து பேசிய தமிழா தமிழா பாண்டியன், ரஜினி குடும்பத்தில் அனைத்து முடிவையும் லதா ரஜினிகாந்த் தான் எடுப்பார், இந்த விவாகரத்து முடிவை எடுத்ததும் அவர் தான் என்று பேசி உள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் காலா படத்தின் போது ஏற்பட்ட நஷ்டத்தால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் தனுஷ் தயாரித்த அடுத்தடுத்த திரைப்படங்களால் அவர் கடும் பணச்சுமையில் இருக்கிறார். குறிப்பாக நயன்தாரா நடித்த நானும் ரௌடி தான் படத்தால், அவருக்கு 16 கோடி நஷ்டம் ஏற்பட்டது. நயனும், விக்னேஷ் சிவனும் காதலிக்க தனுஷ் பணம் தான் கிடைத்ததா. மேலும், போயஸ் கார்டனில் வீடு கட்ட பல தயாரிப்பாளரிடம் கடன் வாங்கி இருக்கிறார். இதனால் தனுஷுக்கு கிட்டத்தட்ட 300 முதல் 400 கோடி கடன் இருக்கிறது. வாங்கிய கடனை தனுஷ் கொடுக்கவில்லை என்றால், அவர்கள் அனைவரும் ரஜினியின் வீட்டுக்கு சென்று விடுவார்கள் என்ற பயத்திலும், பேரன்களை பாதுகாக்க வேண்டும் என்று லதா எடுத்த முடிவு தான் இது. இந்த முடிவு இப்போது எடுத்த முடிவு இல்லை மூன்று ஆண்டுக்கு முன்பே எடுத்த முடிவு.

rajini latha tamizha tamizha pandian

ரஜினி என்ன ஏடிஎம் மிஷினா: அப்படி அந்த குடும்பத்தை பொருத்தவரை லதா ரஜினிகாந்த் எடுக்கும் முடிவுப்படிதான் நடக்கிறது. அந்த குடும்பத்திற்கு ரஜினி ஒரு ஏடிஎம் மிஷின் போலத்தான் இருக்கிறார். ஜெயிலர் படம் வெளியான போது, சன் பிக்சர்சின் தலைவர் கலாநிதி மாறன், லதாவிடம், ரஜினியை யோகி ஆதித்தநாத்தை சந்தித்து பேசும்படி கூறினார். இதைத்தொடர்ந்து தான் ரஜினி, அவரை சந்தித்து காலில் விழுந்து வணங்கி, ஜெயிலர் படத்தைபார்க்கும் படி அழைத்தார். இந்தியில் ஜெயிலர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவரின் காலில் விழுந்தார். அந்த படத்தில் தமன்னாவை ஆடவிட்டு படத்தை வெற்றி பெற வைத்தனர் என்று தமிழா தமிழா பாண்டியன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X