விஜே பிரியங்கா லண்டன் செல்ல இதுவே காரணமா?.. அங்கு ஒரு குடும்பம் இருக்கா?.. பிரபலம் இப்படி சொல்றாரே?

சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா சமீபத்தில்தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். வசி என்பவரை திருமணம் செய்திருக்கும் அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை கூறிவருகிறார்கள். வசியும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். இந்நிலையில் பிரியங்கா - வசி குறித்து பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேசியிருக்கிறார்.

தமிழ் சின்னத்திரை உலகில் விஜய் டிவிக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அந்த சேனலில் பணியாற்றியவர்கள், பணியாற்றுபவர்கள் தமிழ்நாடு முழுவதும் ஃபேமஸாகியிருக்கிறார். சிவகார்த்திகேயன், சந்தானம், யோகி பாபு, நெல்சன் திலீப்குமார், ராஜ்குமார் பெரியசாமி, டிடி, கோபிநாத் என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். அந்தப் பட்டியலில் ஒருவர்தான் விஜே பிரியங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்காவின் ஸ்டைல்: அந்த சேனலில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் பிரியங்கா. தான் ஆங்கரிங் செய்யும் நிகழ்ச்சிகளை எந்தவித சலிப்பும் தட்டாமல் கலகலவென்று கொண்டுபோகும் ஸ்டைலை வைத்திருப்பவர் அவர். இதன் காரணமாக அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை ரசிகர்களும் ஆர்வத்தோடு பார்ப்பார்கள். சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர் உள்ளிட்டவைகளை ஆங்கரிங் செய்த அவர்; சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்றிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

Tamizha Tamizha Pandiya Talks about VJ Priyanka Second Marriage
Photo Credit:

பிக்பாஸில் பிரியங்கா: பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டிருக்கிறார். தன்னால் முடிந்த அளவுக்கு கலந்துகொண்ட சீசனில் சிறப்பாக விளையாடினாலும்; பாதியிலேயே எவிக்ட் செய்யப்பட்டார். ஏற்கனவே பிரபலமாக இருந்த அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மேற்கொண்டு பிரபல்யத்தை கொடுத்தது. இதனால் அவருக்கு மேற்கொண்டு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும்; குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

பிரியங்கா செய்துகொண்ட திருமணம்: இதற்கிடையே அவர் விஜய் டிவியில் தன்னுடன் பணியாற்றிய பிரவீன் குமார் என்பவரை கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேருமே உச்சபட்ச காதலோடு தங்களது வாழ்க்கையை வாழ்ந்துவந்த சூழலில்; சில காரணங்களால் கடந்த 2022ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றார்கள். அவர்களின் பிரிவுக்கு பல்வேறு காரணங்களை பலர் யூகங்களாக சொல்லிக்கொண்டிருந்தனர். பிரியங்காவோ தனது கரியரில் முழு கவனத்தையும் செலுத்தியிருந்தார்.

இரண்டாவது திருமணம்: இப்படிப்பட்ட நிலைமையில் சில மாதங்களுக்கு முன்பு அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். வசி என்பவரை அவர் காதலித்து மணம் முடித்திருக்கிறார். திடீரென அவர்களது திருமணம் நடந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.மேலும் வசிக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது என்று சொல்லப்படுகிறது. மேலும் இரண்டு பேருக்கும் 10 வயதுக்கும் மேல் வித்தியாசம் எனவும் சொல்லப்படுகிறது.

தமிழா தமிழா பாண்டியன் பேட்டி: திருமணத்தை முடித்த கையோடு இரண்டு பேரும் லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்றார்கள்.மேலும் அவர்கள் லண்டனிலேயே விரைவில் செட்டில் ஆகிவிடுவார்கள் என்றும் ஒரு பேச்சு ஓட ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் அவர்கள் பற்றி பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியா தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "பிரியங்காவுக்கும் வசிக்கும் கிட்டத்தட்ட 10 வயது வித்தியாசம். முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததிலிருந்து வசியுடன் பிரியங்கா நட்பில்தான் இருக்கிறார். வெளிநாடுகளுக்கு செல்வது எல்லாம் வசியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதால்தான். வசிக்கு ஏற்கனவே அங்கு ஒரு குடும்பம் இருக்கிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X