twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ’தமிழா தமிழா’ நிகழ்ச்சி.. கன்னத்தில் அறைந்த ஐபிஎஸ் அதிகாரி..வெறியுடன் படித்தேன்.. விஞ்ஞானி சொன்ன கதை

    |

    2 ஆம் வகுப்பு படிக்கும்போது மலக்குழியில் என் தந்தை இறங்கி வேலை செய்ததை பார்த்து மனம் நொந்து போனேன்.

    நன்றாக படித்தேன், ஒரு நாள் ஒரு பிரச்சினையில் ஐபிஎஸ் அதிகாரியிடம் ஆங்கிலத்தில் நிலைமையை விளக்கி சொன்னேன். என் உடை, நிறத்தை வைத்து அனைவர் முன்பு என் கன்னத்தில் அறைந்தார்.

    படிப்பு ஒன்றே உன்னை உயர்த்தும் என்று வெறிகொண்டு படித்தேன். இன்று என்னுடைய கண்டுபிடிப்புகளை தொடங்கி வைக்க ஐபிஎஸ் அதிகாரிகள் வந்து வாழ்த்துகின்றனர் என இளம் விஞ்ஞானி நெகிழ்ச்சியுடன் சொன்னார்.

     மலேஷியாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி..10,000 அடி..உயிரை பணயம் வைத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மலேஷியாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி..10,000 அடி..உயிரை பணயம் வைத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்

     அவமானங்கள் வெற்றியின் படிகட்டுகள்

    அவமானங்கள் வெற்றியின் படிகட்டுகள்

    வாழ்க்கையில் சிலருக்கு ஏற்படும் சிறு அவமானங்கள், மனதை வருடும் நிக்ழ்வுகள் அவர்களுக்கு வைராக்கியத்தை ஏற்படுத்தும். அது நல்லதாகவும் மாறும், பழி வாங்குவதாகவும் மாறும். எதை எடுத்துக்கொள்கிறீர்களோ அதை வைத்து உங்கள் எதிர்காலம் அமையும். அதற்கு உதாரணமாக ஜீ தமிழின் தமிழா தமிழா நிகழ்ச்சியில் பேசிய இளம் விஞ்ஞானியின் பேச்சு இருந்தது. கேட்போரை ஒரு கணம் திடுக்கிட வைத்தது.

     ஜீ தமிழ் தமிழா தமிழா நிகழ்ச்சியில் மனம் நெகிழ வைத்த சம்பவம்

    ஜீ தமிழ் தமிழா தமிழா நிகழ்ச்சியில் மனம் நெகிழ வைத்த சம்பவம்

    பிள்ளைகள் படிப்புக்காக கஷ்டப்பட்ட பெற்றோர்களும், தீவிரமாக படித்து உயர்ந்த பிள்ளைகளும் எனும் தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் பலரும் தங்கள் அனுபவத்தை சொன்னார்கள் அதில் அனைவரையும் நெகிழ வைத்தது ரோபோடிக் ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் படித்து 3 லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலையில் இருக்கும் மகன் தன் அனுபவத்தை சொன்னது. அதற்கு முன் தந்தை தான் எந்த வேலையும் செய்ய தெரியாத தனக்கு சென்னையில் கிடைத்தது சாக்கடையில் அடைப்பை நீக்கும் வேலை. மகனுக்கு தெரியாமல் வேலை பார்த்து வந்தேன். ஆனால் ஒரு நாள் 2 ஆம் வகுப்பு படிக்கும் என் மகன் பார்த்துவிட்டார். வீட்டுக்கு வந்தவர் வேறு வேலை கிடைக்கவில்லையா வருந்தினார் என்றார்.

     கன்னத்தில் அறைந்து கேவலமாக நடத்திய ஐபிஎஸ் அதிகாரி

    கன்னத்தில் அறைந்து கேவலமாக நடத்திய ஐபிஎஸ் அதிகாரி

    அடுத்து பேசிய மகன் அப்பா மலக்குழிக்குள் இறங்கி வேலை செய்வதை பார்த்தபோது மனது வருத்தமாக இருந்தது. நான் நன்றாக படித்தேன். கல்லூரி அளவில் வந்துவிட்டேன், அன்று ஒரு பிரச்சினையில் நியாயத்தை சொல்ல அங்கு வந்திருந்த ஐபிஎஸ் அதிகாரியிடம் பேசினேன். ஆங்கிலத்தில் பேசினால் அவர் எளிதாக எடுத்துக்கொள்வார் என்பதால் ஆங்கிலத்தில் பேசினேன். ஆனால் என் நிறத்தையும், தோற்றத்தையும் வைத்து ஆங்கிலம் பேசுவதை அவர் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை, என்னை ஆத்திரத்தில் நண்பர்கள் முன் கன்னத்தில் அறைந்தார். நான் எந்த தவறும் செய்யவில்லை. அவருக்கு நியாயத்தை விளக்கிச் சொல்ல முயன்றேன். ஆனால் அவர் மோசமாக நடந்துக்கொண்டார்.

     கல்வி ஒன்றே உயர்த்தும் என படித்தேன்

    கல்வி ஒன்றே உயர்த்தும் என படித்தேன்

    அதன் பின் நான் யோசித்தேன் எந்த கல்வியை வைத்து அவர் அவ்வாறு நடந்துக்கொண்டாரோ அதை வைத்து உயரவேண்டும் என்று முடிவு செய்தேன். வைராக்கியமாக படித்தேன். அந்த ஐபிஎஸ் அதிகாரி கன்னத்தில் அடித்தது ஞாபகம் வரும்போதெல்லாம் வெறிகொண்டு படித்தேன். அதன் பின்னர் எனது கண்டுபிடிப்புகளுக்காக நடந்த நிகழ்ச்சியில் ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்துக்கொண்டு கைத்தட்டி வாழ்த்தினர். இன்று நான் 3 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறேன். என் அம்மா எனக்காக அவரது தாலியை வைத்து படிக்க வைத்தார் முதல் சம்பளத்தில் அம்மாவுக்கு தாலி, 5 பவுன் நகை எடுத்து கொடுத்தேன்.

     அப்பாக்கு தனி வீடு, கார் வாங்கி கொடுத்த இளைஞன்

    அப்பாக்கு தனி வீடு, கார் வாங்கி கொடுத்த இளைஞன்

    அப்பா பத்துக்கு பத்து அறையில் கஷ்டப்பட்டவரை ஊரில் வீடு கட்டி கொடுத்து நிம்மதியாக ஓய்வெடுக்க சொன்னேன், அவருக்காக ஒரு கார் வாங்கி கொடுத்திருக்கிறேன் என்று கூறினார். அவரது அப்பா பேசும்போது எனக்கு சம்பாதித்தது போதும், இதுபோன்ற ஏழைப்பிள்ளைகள் கஷ்டப்படாமல் இருக்க ஊரில் ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்க சொல்லியிருக்கிறேன் என்றார். இருவரையும் அரங்கமே பாராட்டியது. அந்த மாணவர் தனது ரிவஞ்சை வேறு மாதிரி எடுத்திருந்தால் குற்றவாளியாக மாறியிருப்பார். ஐபிஎஸ் அதிகாரி தனது ஆணவ போக்கால் செயல்பட்டது ஒருவரை பெரிய விஞ்ஞானியாக்கியுள்ளது தீமையிலும் நன்மையே.

    English summary
    When I was studying in 2nd standard, I was heartbroken to see my father working in drainage. I studied well and one day explained the situation in English to an IPS officer on a problem. He slapped me on the cheek in front of everyone with my dress and color. I read obsessively that studies alone will elevate you. The young scientist excitedly said that the IPS officers came to congratulate me today to launch my discoveries.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X