13 கிராமம்.. சாலையோரம் திரண்ட மக்கள்.. பரபரப்பாகும் பரந்தூர் பயணம்.. விஜய் என்ன செஞ்சாரு பாருங்க!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். இதன் காரணமாக இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கிறார். அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தச் சூழலில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக 900 நாட்களுக்கும் மேலாக போராடும் 13 கிராம மக்களை சந்திப்பதற்காக இன்று தனது கட்சி கொடி பொருத்தப்பட்ட வாகனத்தில் பரந்தூருக்கு சென்றிருக்கிறார்.

கோலிவுட்டின் வசூல் ராஜாவாக திகழ்பவர் விஜய். அவர் கடைசியாக நடித்த GOAT, லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய நான்கு படங்களுமே விமர்சன ரீதியாக அடிவாங்கினாலும் வணிக ரீதியாக சக்கைப்போடு போட்டது. அதாவது அந்த நான்கு படங்களுமே 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக அந்த படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தன. இதன் காரணமாக தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று ஓபனாகவே அவரது ரசிகர்கள் கூறினார்கள்.

tamizhaga vetri kazhagam vijay tvk

தமிழக வெற்றிக் கழகம்: இதற்கிடையே விஜய் அரசியலுக்கு வருவார் என்று கடந்த சில வருடங்களாகவே ஆரூடம் கூறப்பட்டது. அந்த ஆரூடம் பலிக்கும் விதமாக கடந்த வருடம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார் விஜய். கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. அதில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய விஜய் தனது கட்சியின் கொள்கை என்ன, அரசியல் ரீதியான எதிரி யார் என்பது குறித்து வெளிப்படையாக பேசினார்.

முழு மூச்சாக அரசியல்: விக்கிரவாண்டி மாநாட்டுக்கு பிறகு விஜய்க்கு எதிராக திமுகவினர் களமாட தொடங்கினார்கள். அதற்கு தூபம் போடும் விதமாக எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்துகொள்ளாததை வைத்து மறைமுகமாக திமுகவை விமர்சித்தார். இதனையடுத்து மேற்கொண்டு விஜய்க்கு எதிராக திமுகவினரும், விசிகவினரும் காத்திரமாக கருத்துக்களை முன்வைத்துவருகிறார்கள். அவர்களுக்கு விஜய்யும் தன்னால் முடிந்த பதிலடியை கொடுத்துவருகிறார்.

தளபதி 69: சூழல் இப்படி இருக்க அரசியலில் முழுமூச்சாக களமிறங்கியிருப்பதால் இன்னும் ஒரு படத்தில் மட்டும்தான் நடிக்கவிருக்கிறார் விஜய். அந்தப் படத்துக்கு தளபதி 69 என்று தற்போதைக்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதனை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் மமிதா பைஜு உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஒருபக்கம் படத்தின் ஷூட்டிங் மறுபக்கம் அரசியல் மீட்டிங் என பிஸியாக இருக்கிறார் விஜய்.

பரந்தூர் பயணம்: அந்தவகையில் பரந்தூருக்கு இன்று சென்றிருக்கிறார் அவர். அதாவது பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக 13 கிராம மக்கள் 900 நாட்களுக்கும் மேலாக போராடிவருகிறார்கள். அவர்களை பொடவூர் தனியார் மண்டபத்தில் வைத்து சந்திக்கவிருக்கிறார். இதற்காக தனது பிரசார வாகனத்தில் வெள்ளை சட்டை அணிந்தபடி விஜய்யை காண்பதற்கு வழி நெடுகிலும் ஏராளமான மக்கள் குழுமியிருந்தனர். அவர்களை பார்த்து வாகனத்தில் வந்தபடியே கையசைத்தார் விஜய். அதனையடுத்து தனியார் மண்டபத்துக்கு வந்து சேர்ந்த அவர் வாகனத்தின் மேல் நின்று தொண்டர்களையும், மக்களையும் பார்த்து கையசைத்தார். அதனை கண்டு அங்கு இருந்தவர்கள் உற்சாகமடைந்தார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X