பட்டையை கிளப்பும் தமிழன் எஸ்டிஆர் 360... வைரலாகும் சிம்புவின் புதிய வீடியோ

சென்னை : குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ள சிம்பு, காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். நடிகர், பாடகர், டைரக்டர், இசையமைப்பாளர், நடன கலைஞர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர் சிம்பு.

கலைமாமணி, சைமா, எடிசன், ஃபிலிம்ஃபேர் என பல விருதுகளை பெற்ற சிம்பு, சமீபத்தில் தான் மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். 2021 ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் மாநாடு படத்தை அக்டோபர் மாதம் ஆயத பூஜைக்கு தியேட்டரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

விரைவில் நதிகளில் நீராடும் சூரியன்

விரைவில் நதிகளில் நீராடும் சூரியன்

இதைத் தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்க உள்ளார் சிம்பு. ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு நதிகளில் நீராடும் சூரியன் என பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது.

10 கோடி சம்பளமா

10 கோடி சம்பளமா

சுமார் 2 மாதங்கள் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. இந்த படத்திற்காக முதல் முறையாக சிம்பு ரூ.10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான முழு ஸ்கிரிப்டையும் கவுதம் மேனன் ஏற்கனவே தயார் செய்து விட்டாராம்.

வைரலாகும் சிம்புவின் பதிவுகள்

படங்களின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தாலும் சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து வரும் சிம்பு, தனது லேட்டஸ்ட் லுக், சமையல், ஒர்க்அவுட் செய்யும் ஃபோட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அப்படி அவர் வெளியிடும் போஸ்ட்கள் தாறுமாறாக வைரலாகும்.

சிம்பு தினமும் என்ன பண்ணுவார்

சிம்பு தினமும் என்ன பண்ணுவார்

அந்த வரிசையில் தற்போது சிம்பு பதிவிட்டுள்ள வீடியோவும் வைரலாகி வருகிறது. சிம்பு ஒர்க் அவுட் செய்வது, வாக்கிங் செல்வது, சண்டை மற்றும் நடன பயிற்சி செய்வது ஆகியவற்றுடன் மாநாடு படத்தில் கையில் துப்பாக்கியுடன் நிற்கும் ஃபோட்டோஷுட் ஃபோட்டோவையும் இணைத்து வீடியோவாக உருவாக்கி உள்ளனர்.

Recommended Video

கிச்சன் அறையில் சிம்பு காட்டிய விரல் வித்தை.. செம வீடியோ.. ஒரு கோடி கடந்து மாஸ் சாதனை!
தமிழன் எஸ்டிஆர் 360

தமிழன் எஸ்டிஆர் 360

தமிழன் எஸ்டிஆர் 360 என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவுடன், எனது பயணத்தை இதை விட அழகாக படமாக்க முடியாது. உங்களின் அன்பும் ஆதரவும் இல்லாமல் இது நடந்திருக்காது. இந்த அற்புதமான எடிட்டிங்கிற்கு நன்றி என கேப்ஷன் பதிவிட்டுள்ளார் சிம்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X