»   »  தமன்னாவுக்கு வந்த சோதனையை பாருங்க... 72 வயது 'முதியவரை' காதலிக்கிறாராம்!

தமன்னாவுக்கு வந்த சோதனையை பாருங்க... 72 வயது 'முதியவரை' காதலிக்கிறாராம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை தமன்னா அம்பானவன், அசராதவன், அடங்காதவன் என்று திரைப்படத்தில் 72 வயது முதியவராக வரும் நடிகர் சிம்பு காதலிக்கும் வேடத்தில் நடிக்கிறார்.

நடிகை தமன்னாவுக்கு அவருடை நடிப்புத் துறையில் கெட்ட காலம் தொடங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அவர் நடித்த பாகுபலி தி கன்குளுஷன் என்ற படத்தில் அவர் அதிகம் நம்பிக்கை கொண்டிருந்தார்.

Tammanna fall in love with 72 years old man

ஆனால் அதில் அவரைக் காட்டிலும் ஸ்பான்ஸரின் பெயர்தான் அதிகம் இடம்பெற்றிருந்தது. இதனால் அவருக்கு வருத்தம் அதிகமாகிவிட்டது. தற்போது நடிகர் சிம்புவுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த படம் "ஏஏஏ" (அன்பானவன் அசராதவன் அடங்காதவன்).

இப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் அந்த படத்தின் படகாட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த படத்தில் சிம்பு வயதானவர் கெட்டப்பில் உள்ளதால் தமன்னா முதியவர் சிம்புவுடன் இணைந்து இருப்பது போன்ற டிரெய்லர்களும் வெளியாகியுள்ளன.

இந்த படத்தில் ஸ்ரேயா சரண் முக்கிய கதாபாத்திரம் எடுத்து செய்திருக்கிறார். சிம்பு இரட்டை வேடம் ஏற்று நடிக்கிறார். அதில் மதுரை மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்பு பாதியில் இறந்து விடுகிறார். அதன் பிறகு 72 வயதானவர் கெட்டப்பில் தோன்றுகிறார்.

எதற்காக அந்த கெட்டப்பில் சிம்பு தோன்றுகிறார் என்பது குறித்து அறிந்து கொள்ள படத்தை பார்த்தால் மட்டுமே தெரியும்.

English summary
Tamannaah falls in love with a 70-Year-Old man?. Her next project AAA is released today. Actor Simbu did dual role in this movie. one is young and other is old.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil