twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தாண்டவமாடும் தாண்டவ் சர்ச்சை.. அமேசான் பிரைமையே அன் இன்ஸ்டால் பண்ணுங்க.. வெடித்த போர்க்கொடி!

    |

    மும்பை: அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள தாண்டவ் வெப்சீரிஸ், இந்து மதத்தையும் இந்துக்களையும் கேலியாக சித்தரிக்கும் விதமாக உருவாக்கப்பட்டு இருப்பதாக காவல் துறை அதிகாரி ஒருவரே கொடுத்த புகார் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    பாலிவுட்டின் முன்னணி நடிகரான சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் நடித்துள்ள புதிய வெப்சீரிஸ் தாண்டவ்.

    சித்ராவுக்கு விர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்க டாக்டர்க்கிட்டேயே கேட்ட ஹேமந்த்.. வெளியான பகீர் தகவல்! சித்ராவுக்கு விர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்க டாக்டர்க்கிட்டேயே கேட்ட ஹேமந்த்.. வெளியான பகீர் தகவல்!

    தாண்டவ் வெப்சீரிஸை வெளியிட்ட அமேசான் பிரைமையே அன் இன்ஸ்டால் பண்ணுங்க என #Unistall_Amazon ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

    எல்லை மீறுகின்றன

    எல்லை மீறுகின்றன

    வெப்சீரிஸ்களுக்கு சென்சார் இல்லாததை பயன்படுத்திக் கொண்டு ஆபாசமாகவும், இந்து கடவுள்களை அவமதிக்கும் விதமாகவும், இந்திய ராணுவத்தினரை கொச்சைப்படுத்தும் விதமாகவும் ஏகப்பட்ட வெப்சீரிஸ்கள் தயாரிக்கப்பட்டு வெளியாகி வருகின்றன. தொடர்ந்து, இது போன்ற வெப்சீரிஸ்களை தடை செய்ய வேண்டும் என்றும், சென்சார் தேவை என்றும் கண்டன குரல்களும் வலுத்து வருகின்றன.

    தாண்டவ் சர்ச்சை

    தாண்டவ் சர்ச்சை

    இந்நிலையில், சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான தாண்டவ் வெப்சீரிஸ் இந்து மதக் கடவுள்களையும் இந்து மதத்தையும் இழிவுப்படுத்தியதாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளது மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

    உடனே மன்னிப்பு

    உடனே மன்னிப்பு

    பிரச்சனை பெரிதாக ஆனதை உணர்ந்த வெப்சீரிஸ் தயாரிப்பாளர்கள் உடனடியாக மன்னிப்பு கேட்டுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கவும் தயார் என கூறியுள்ளனர். ஆனால், அவர்களது மன்னிப்பை ஏற்க முடியாது என்றும், இது வேண்டுமென்றே திட்டமிட்டு தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. நிச்சயம் தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் என்றும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    அன் இன்ஸ்டால் அமேசான்

    அன் இன்ஸ்டால் அமேசான்

    இந்நிலையில், இன்று காலை முதல் அன் இன்ஸ்டா அமேசான் என்பதை வலியுறுத்தி #Unistall_Amazon என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. இதற்கு முன்னதாகவும் அமேசான் பிரைமில் வெளியான பாதாள் லோக் உள்ளிட்ட பல வெப்சீரிஸ்கள் இந்து மதத்தை குறி வைத்தே எடுக்கப்பட்டதாகவும், அமேசான் பிரைமை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

    English summary
    Tandav webseries controversy makes path to #Unistall_Amazon trending in twitter. Actor Saif Ali Khan’s new webseries Tandav gets into trouble after some scenes insults Hindu religion.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X