டனக்கு ருட்டுக்கு ருட்டுக்கு டும் டும்..செம்ம வைரலுங்கோ !
சென்னை : வலைதளங்களில் அவ்வப்போது சில வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலாகி வரும் நிலையில் இப்பொழுது புதுவிதமான வீடியோ ஒன்று வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் கவர்ந்து ட்ரெண்டாகி வருகிறது.
பொதுவாக ஹீரோ மற்றும் ஹீரோயின்களின் படங்களில் வரும் வசனங்களை, சில கட்சிகள் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ் ஆக வைத்தது போக இப்பொழுது ஒரு குட்டி கார்ட்டூன் வீடியோ செம வைரலாகியுள்ளது.
வசனங்கள் எதுவும் இல்லாமல் வெறும் வாயாலேயே இசைத்துக் கொண்டிருக்கின்றன இந்த க்யூட் கார்ட்டூன் வீடியோவிற்கு பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் பலர் அடிமையாகி தங்களை அந்த கார்ட்டூன் உடன் இணைத்து கொள்கின்றனர்.

ஓவர் பில்டப் சண்டை
சமூக ஊடகங்களில் அவ்வப்போது சில விஷயங்கள் எதற்கு வைரலாகிறது ஏன் வைரலாகிறது என்று தெரியாமலேயே செம வைரலாகி வருவது வழக்கமான ஒன்று. பிக் பாஸ் சீசன் ஒன்றில் ஓவியா ஆர்மி தொடங்கி தொலைக்காட்சி இயக்குனரும் நடிகருமான திருமுருகன் நடித்த சீரியல் காட்சிகள், சமீபத்தில் கிருபா கிருபா பாடல், மற்றும் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் நம்ப முடியாத ஓவர் பில்டப் சண்டை காட்சிகள் என பலதரப்பட்ட வீடியோக்கள் தொடர்ந்து டிரெண்ட்டாகி வருவது வழக்கமாக உள்ளது.

வித்தியாசமாக நடந்தாலே
சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் ஏதாவது ஒரு விஷயம் வித்தியாசமாக நடந்தாலே அது தொடர்ந்து வைரலாகி உலக அளவில் அவரையும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

குடும்பத்தாருடன் புட்ட பொம்மா
அதற்கு சான்றாக தமிழில் 3 திரைப்படத்தில் வரும் "ஒய் திஸ் கொலவெறி" பாடல் உலக அளவில் செம வைரலாகி அவரையும் கவர்ந்த நிலையில் அந்த பாடல் மொழிகளைக் கடந்து எங்கு பார்த்தாலும் ஒலித்துக்கொண்டிருந்தது. அதைத்தொடர்ந்து சமீபத்தில் ரவுடி பேபி மற்றும் புட்டபொம்மா உள்ளிட்ட பாடல்களும் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளி நாட்டு மக்களும் ஆடிப்பாடி கொண்டாடி ரசித்து வந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரரான வார்னர் தனது குடும்பத்தாருடன் புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடிய அழகான வீடியோ அனைவரையும் ரசிக்க வைத்ததோடு அதுவும் வைரலானது.

கார்ட்டூன் வீடியோ
இவ்வாறு இணையதளத்தில் அவ்வப்போது எதிர்பாராமல் வீடியோக்களும் புகைப்படங்களும் செம ட்ரெண்ட்டாகி, வைரலாகி வரும் நிலையில் இப்பொழுது ஒரு குட்டி கார்ட்டூன் பொம்மை கைகால்களை அசைத்தவாறு அழகாக ஆட்டம் போட்டுக்கொண்டு நடந்து செல்ல அதற்கு பின்னணி இசையாக "டனக்கு ருட்டுக்கு ருட்டுக்கு டும் டும்" என செம ஜாலியாக ஒரு குழந்தையின் பின்னணி குரல் கொடுத்திருப்பது பார்க்க செம க்யூட்டாக இருப்பதோடு அது அனைவரையும் ஈர்க்க ஆண் பெண் வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரும் இந்த வீடியோவை தங்களது வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் ஸ்டேட்டஸ்களாகவும், பகிர்ந்தும் மகிழ்ந்து வருகின்ற நிலையில், பலரும் இந்த வீடியோவைப் பார்க்கும்பொழுது தங்களுக்கு மிகவும் மனம் மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்க மனதை சாந்தப் படுத்துவதாகவும் இருக்கின்றது என கூறியுள்ளனர். சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. நீங்களும் இந்த வீடியோவ பாருங்க சூப்பரா இருக்கும்.


Click it and Unblock the Notifications