அமெரிக்காவில் வேலை பார்க்கிறேனா..? வேகமாக மறுத்த பிரபல ஹீரோயின்.. மீண்டும் நடிக்க வருகிறார்!

By

மும்பை: மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாகவும் 3 தென்னிந்திய படங்களில் பேசி வருவதாகவும் நடிகை தனுஶ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.

தமிழில், தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்தவர் தனுஶ்ரீ தத்தா.

இந்தியில் சில படங்களில் நடித்திருந்த தனுஶ்ரீ, 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடிக்கவில்லை.

மாறி இருந்தார்

மாறி இருந்தார்

சினிமாவை விட்டு ஆன்மீகம் பக்கம் சென்றார். சிறிது காலம் அமைதியாக இருந்த அவர், மீ டு புகார் பரபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தார். இவர், பிரபல இந்தி நடிகர், நானா படேகர் மீது பாலியல் புகார் கூறினார்.

வெளியே சொன்னதால்

வெளியே சொன்னதால்

ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற இந்தி படத்தில் நடித்தபோது, நானா படேகர், பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும் இதுகுறித்து வெளியே சொன்னதால் அவர் ஆதரவாளர்கள் மிரட்டினார்கள் என்றும் குடும்பத்தோடு சென்றபோது தாக்கப்பட்டேன் என்றும் கூறியிருந்தார். இதற்கு பிரபல நடன இயக்குனர் கணேஷ் ஆச்சாரியாவும் உடந்தை என்றும் தெரிவித்து இருந்தார். இந்த புகார், பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆதரவாகக் குரல்

ஆதரவாகக் குரல்

நானா படேகர், தமிழில் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம், ரஜினியின் காலா படங்களில் நடித்தவர். இதையடுத்து இந்தி நடிகர், நடிகைகள் சிலர் தனுஸ்ரீக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். பின்னர், நானா படேகர் மீது, மும்பை ஓஸிவாரா போலீஸ் நிலையத்தில் தனுஶ்ரீ புகார் அளித்தார்.

தேவையான சாட்சி

தேவையான சாட்சி

போலீசார், நானா படேகருக்கு எதிராக தேவையான சாட்சியங்கள் இல்லாததால், விசாரணையை தொடர முடியவில்லை என கூறி முடித்துவிட்டனர். இதை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்துள்ளார் தனுஶ்ரீ தத்தா. நானா படேகர் நடத்தும் அமைப்பு ஒன்று, தனுஶ்ரீ மீது மான நஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளது.

வேலை கிடைத்தது

வேலை கிடைத்தது

இந்நிலையில், அமெரிக்கா சென்ற அவர், அங்கு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகக் கூறப்பட்டது. இதை மறுத்து நீண்ட பதிவு வெளியிட்டுள்ள நடிகை தனுஶ்ரீ, தான் மீண்டும் நடிக்க இருப்பதாகக் கூறியுள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது: அமெரிக்க பாதுகாப்பு துறையில் எனக்கு வேலை கிடைத்தது.

வெளியேற அனுமதி

வெளியேற அனுமதி

அதில் பணியாற்றினால் மூன்று வருடங்களுக்கு அமெரிக்காவை விட்டு வெளியேற அனுமதி கிடையாது. அமெரிக்க பாதுகாப்பு தொடர்பான துறை என்பதால் 3 வருடங்களுக்கு நான் ஒப்பந்தம் போட வேண்டும். நடிகையாகவே என்னை உணர்வதால் அவசரப்பட வேண்டாம் என்று முடிவு செய்து மும்பை திரும்பிவிட்டேன்.

வருகையை அறிவித்தேன்

வருகையை அறிவித்தேன்

மூன்று தென்னிந்திய படங்களில் நடிக்க பேசி வருகிறேன். பாலிவுட்டிலும் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. கொரோனா காரணமாக அந்த அறிவிப்புகள் தள்ளிப் போயிருக்கிறது. சமீபத்தில் விளம்பர படம் ஒன்றில் நடித்து என் வருகையை அறிவித்துள்ளேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக 15 கிலோ உடல் எடையை குறைத்துள்ளேன். இவ்வாறு நடிகை தனுஶ்ரீ தத்தா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X